Home /News /entertainment /

ஈரமான ரோஜாவே தொடரில் திடீர் மாற்றம்.. முக்கிய நடிகர் சீரியலை விட்டு விலகினார்!

ஈரமான ரோஜாவே தொடரில் திடீர் மாற்றம்.. முக்கிய நடிகர் சீரியலை விட்டு விலகினார்!

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே

இதில் திரவியம் மட்டுமே முதல் பாகத்தில் இருந்து தொடர்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் அருணாச்சலம் ரோலில் நடித்து வந்த நடிகர் தசரதி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

    கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் தொடரான 'ஈரமான ரோஜாவே' ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் நிறைவடைந்தது. இதில் திரவியம் மற்றும் பவித்ரா ஜனனி லீட் ரோலில் நடித்தனர். இதில் நடித்த ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் இப்போது விஜய் டிவியின் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வருகின்றனர். முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஈரமான ரோஜாவே 2 தற்போது டெலிகாஸ்ட் ஆகிறது. இதில் திரவியம் மட்டுமே முதல் பாகத்தில் இருந்து தொடர்கிறார். மற்ற அனைவரும் வெவ்வேறு சீரியல்களில் நடித்தவர்கள்.

    விஜய் டிவி மதுரை முத்து பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?

    ஹீரோவாக சித்தார்த் குமரன், ஹீரோயினாக ஸ்வாதி கோண்டே , கேப்ரில்லா சார்ல்டன், ஆகியோர் நடிக்கின்றனர். தம்பி காதலித்த பெண்ணை அண்ணனும், அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தம்பியும் என மாறி மாறி நடக்கும் இவர்களின் திருமணம்,கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த சீரியலின் ஒன்லைன். நட்புக்கு கொடுக்கும் மரியாதையாக தொழிலதிபர் அருணாச்சலம் தனது நண்பர் வீட்டில் இருந்து 2 மகன்களுக்கும் பெண் எடுக்கிறார். ஜீவா - பிரியா, காவ்யா - பார்த்தி ஆகியோர் விதியின் விளையாட்டால் கணவன் - மனைவியாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்த 2 ஜோடிகளும் பழைய காதலை மறந்து கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்வார்களா? இல்லையா? இதன் நடுவில் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எபிசோடுகளாக ஒளிப்பரப்பாகி வருகின்றன.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    கதைப்படி தற்போது பிரியாவிடம் ஜீவா அன்பாக பழக தொடங்கி விட்டார். அதே போல் பார்த்தியின் பொறுமையால் காவ்யாவின் மனதும் மாற தொடங்குகிறது. கதை இப்படி விறுவிறுப்பாக செல்ல இந்த சீரியலில் இருந்து தற்போது முக்கிய நடிகர் விலகியுள்ளார். சீரியலில் ஜீவா மற்றும் பார்த்தியின் அப்பாவாக அருணாச்சலம் என்ற ரோலில் நடித்து வந்த நடிகர் தசரதி சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவர் வெறும் நடிகர் மட்டுமில்லை பிரபல வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்டும் கூட. விஜய் டிவியில் ஒளீபரப்பான மகாபாரதம் சீரியலில் கிருஷ்ணருக்கு தமிழில் குரல் கொடுத்தவர் இவர் தான். தசரதியின் இந்த திடீர் விலகலுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி