Home /News /entertainment /

துல்கரின் யதார்த்த நடிப்பில் ’ஹே சினாமிகா’.. கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பு!

துல்கரின் யதார்த்த நடிப்பில் ’ஹே சினாமிகா’.. கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பு!

ஹே சினாமிகா

ஹே சினாமிகா

வரும் 28–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்;

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ’ஹே சினாமிகா’ திரைப்படம் கலர் தமிழில் ஒளிபரப்பாகிறது.

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ள ‘ஹே சினாமிகா’ என்ற புதிய திரைப்படத்தை முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. மென்மையான காதல் நகைச்சுவை நிறைந்த திரைப்படமான இது கணவனின் அளவு கடந்த பாசத்தால் சோர்வடைந்து, அவரிடமிருந்து விலகிச் செல்வதற்கான வழிகளைத் தேடும் மனைவியை பற்றியதாகும். வரும் 28–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; படத்தை பார்த்து மகிழுங்கள்.

  பாக்கியலட்சுமியில் வில்லியாகும் ராதிகா.. இது என்ன புது ட்விஸ்டால இருக்கு!

  நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் நட்சத்திரா நாகேஷ், யோகி பாபு மற்றும் அபிஷேக் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். மதன் கார்க்கி எழுதியுள்ள பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இவரின் மெல்லிசை மிகவும் மனதை வருடும் வகையில் அமைந்துள்ளது. துல்கர் சல்மானை காதலித்து மணக்கும் அதிதி திருமணத்திற்கு பின் 2 வருடங்கள் துல்கர் சல்மானின் நடவடிக்கைகளால் வெறுப்படைகிறார். அவனிடம் இருந்து விலகி ஒரு வருடம் பாண்டிச்சேரியில் இருக்க திட்டமிடுகிறாள். ஆனால் யாழனும் அவளுடன் சென்றதால் அவளது முயற்சி தோல்வி அடைகிறது. இந்த நிலையில், அவனிடம் இருந்து விடுபடுவதற்கான வழிகளை தேடுகிறாள். அப்போது அவள், மலர்விழியை (காஜல் அகர்வால்) சந்தித்து, அவளை யாழனை காதலிக்கச் செய்து, அதை காரணமாக வைத்து யாழனை விவகாரத்து செய்ய முடிவெடுக்கிறாள். மௌனாவும் யாழனும் பிரிகிறார்களா? அல்லது மலர்விழியின் காதலில் யாழன் விழுந்து விடுகிறாரா? என்பதே படத்தின் மீதி கதையாகும்.

  அப்பவே விஜய் டிவி பிரபலத்தின் திருமணத்தில் கலந்து கொண்ட அதிதி.. ஃபோட்டோ உள்ளே!

  இது குறித்து இயக்குனர் பிருந்தா கூறுகையில், “என்னுடைய முதல் படமான ஹே சினாமிகா, நான் நீண்ட காலமாக நிகழ்ச்சிகளை வழங்கி வரும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் தலைப்பு எனது குரு மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த படத்தை ஒரு பொழுபோக்கு படமாக எடுப்பதற்காக எங்கள் குழு அயராது பணியாற்றியது. திரையரங்குகளில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைப்போல தொலைக்காட்சியிலும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். குடும்பத்துடன், குறிப்பாக புதுமணத் தம்பதி கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.”

  Dulquer Salman starrer Hey Sinamika this Sunday on Colors Tamil channela Dulquer Aditi Rao Hydari Kajal Aggarwal
  ஹே சினாமிகா


  இந்த படம் குறித்து துல்கர் சல்மான் கூறுகையில், “நான் நடித்து எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ‘ஹே சினாமிகா’வும் ஒன்று. இயக்குனர் பிருந்தா அவரது முதல் படத்தில் என்னை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். எனது முந்தைய படங்களில் நான் மிகவும் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் பார்வையாளர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒரு கணவனாக நடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். இந்த படத்தில் நான் கொஞ்சம் எரிச்சலாக இருப்பதற்கும் அப்பாவியாக இருப்பதற்கு இடையில் சமநிலையை கையாள வேண்டியது இருந்தது. எனது கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குனர் பிருந்தாவுக்கும், என்னுடன் நடித்த அதிதி, காஜல் மற்றும் சக நடிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”.

  காதல், நகைச்சுவை நிறைந்த இந்த படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள் என்று தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Dulquer Salmaan, Kollywood, Tamil movies

  அடுத்த செய்தி