ஹேமா யாருன்னு கண்ணம்மாவுக்கு தெரிஞ்சிருச்சா? பாரதி கண்ணம்மாவில் அடுத்த டிவிஸ்ட்!

பாரதி கண்ணம்மா சீரியல்

கண்ணம்மா, தான் பெற்றெடுத்தது ஒரே பெண் குழந்தை என நினைத்து லட்சுமி என பெயர்சூட்டி வளர்க்கிறாள். பாரதி தன் வீட்டில் வளரும் குழந்தைக்கு ’ஹேமா’ எனப் பெயர் சூட்டி தத்துப்பிள்ளையாக வளர்க்கிறான்.

  • Share this:
அட போங்கப்பா.... என ரசிகர்களே அலுத்துப்போகும் அளவுக்கு அடுத்தடுத்து டிவிஸ்டுகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். விஜய் டிவியில் டாப் சீரியலாக இருக்கும் பாரதி கண்ணம்மாவில், இந்த வாரத்தில் மட்டுமே ஏகப்பட்ட ட்விஸ்டுகள். கண்ணம்மாவின் குழந்தை லட்சுமி என்பதை பாரதி தெரிந்து கொள்கிறான். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த டிவிஸ்ட்டை கண்ணம்மா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அது என்ன என்பது தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.

கணவன் மனைவியான பாரதி, கண்ணம்மா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். பாரதியை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படும் வெண்பா, அவர்கள் இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்பதற்காக சூழ்ச்சிகளை அரங்கேற்றுகிறாள். இந்த வலையில் சிக்கும் பாரதி, கண்ணம்மாவை சந்தேகப்பட்டு கர்ப்பிணியாக இருக்கும்போது வீட்டை விட்டு துரத்தி விடுகிறான். கர்ப்பிணியான கண்ணம்மா, தனியாக வாழ்ந்து இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். இதனையறிந்து கொண்ட கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா, மருத்துவமனைக்கு சென்று ஒரு குழந்தையை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்ணம்மா, தான் பெற்றெடுத்தது ஒரே பெண் குழந்தை என நினைத்து லட்சுமி என பெயர்சூட்டி வளர்க்கிறாள். பாரதி தன் வீட்டில் வளரும் குழந்தைக்கு ’ஹேமா’ எனப் பெயர் சூட்டி தத்துப்பிள்ளையாக வளர்க்கிறான். ஹேமாவுக்கு தன்னுடைய உண்மையான அப்பா, அம்மா யார்? என தெரியாது. பாரதிக்கும் ஹேமா தன்னுடைய குழந்தை என தெரியாது. கண்ணம்மாவுக்கும் பாரதி வீட்டில் வளரும் குழந்தை தன்னுடைய குழந்தை என தெரியாது. அதே நேரத்தில் இந்த விஷயம் அனைத்தும் பாரதியின் அம்மாவான சௌந்தர்யாவுக்கு தெரியும்.

காலப்போக்கில் வளரும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கும்போது நெருங்கிய தோழிகளாக மாறுகின்றனர். ஒரு கட்டத்தில் ஹேமாவுக்கு கண்ணம்மா மீது அலாதி பிரியம் ஏற்பட்டு, உடல் நிலை சரியில்லாதபோது கூட கண்ணம்மா இருந்தால் சரியாகும் என்ற நிலைக்கு இருவரும் நெருக்கமாகின்றனர். இதனால், ஹேமா மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் பாரதியும், கண்ணம்மாவும் மீண்டும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

கண்ணம்மாவின் குழந்தையான லட்சுமியையும் பாரதியே படிக்க வைக்கிறான். இதில் தான் இப்போது டிவிஸ்ட் ஏற்படுகிறது.இவ்வளவு நாட்களாக கண்ணம்மாவின் குழந்தை லட்சுமி என தெரியாத இருந்த பாரதிக்கு, இப்போது அது தெரிய வருகிறது. கணவன் மனைவியான பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் வரும்போது கண்ணம்மா மறைத்துவைத்திருந்த உண்மையை போட்டுடைத்துவிடுகிறாள்.

Also read... பாவம்... கோபி சொன்ன பொய்யை நம்பி நடு ராத்திரியில் பாக்கியா செய்த செயல்!

கோபத்தின் உச்சத்துக்கே செல்லும் பாரதி, கண்ணம்மாவை முன்பை விட மீண்டும் வெறுக்கிறான். அப்பா, அம்மாவிடமும் தன் கோபத்தை காட்டுகிறான். சீரியல் இவ்வளவு சூடாக சென்று கொண்டிருக்கும்போது கண்ணம்மா ரோஷ்னி, தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ஹேமா, லட்சுமியின் புகைப்படத்தை பகிர்ந்து இரண்டு விரல்களைக் காட்டி போஸ் கொடுக்கிறார். இதனால், ஹேமா தன் குழந்தை என்பது கண்ணம்மாவுக்கு தெரிந்துவிட்டதோ, விரைவில் அந்த எபிசோடுகள் ஒளிபரப்பாக போகிறதோ? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: