Home /News /entertainment /

டாக்டர் பாரதி ஏன் இப்படி தேடி தேடி போய் பல்பு வாங்குறாரு?

டாக்டர் பாரதி ஏன் இப்படி தேடி தேடி போய் பல்பு வாங்குறாரு?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கண்ணம்மா கூடவே இருந்தும், பாரதிக்கு கண்ணம்மா மீது நம்பிக்கை மட்டும் வருவதாக தெரியவில்லை.

    பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் டாக்டர் பாரதி வழக்கம் போல் பல்பு வாங்குகிறார். பாரதி, கண்ணம்மா விஷயத்தில் மொக்கை வாங்குவது புதுசு இல்லை என்றாலும் பாரதி மனசில், கண்ணம்மா பற்றிய சந்தேகம் மட்டும் குறைந்த பாடில்லை.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் அண்மையில் சந்தித்த டி.ஆர்.பி சறுக்கலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. சீரியலின் கதைக்களமும் சுறுசுறுப்பாக பயணித்து கொண்டிடிருக்கிறது. புது கண்ணம்மா, வினுஷாவும் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து விட்டார். நிஷாவின் சிறப்பு தோற்றமும் சீரியலை படு ஜாலியாக கொண்டு செல்ல உதவுகிறது. கணவன் - மனைவிக்குள் சந்தேகம் என்ற ஒன்று வந்து விட்டால் அது என்னென்ன விளைவுகளை கொண்டு வரும் என்ற ஒன்லைனில் தான்  தற்போது சீரியல் பயணிக்கிறது.

    பாரதி, கண்ணம்மா மீது கொண்ட சந்தேகமும் இவ்வளவு பெரிய விரிசலுக்கு காரணம். 9 வருடங்களாக கண்ணம்மாவை பிரிந்து இருந்த பாரதி, வில்லி வெண்பாவின் சதியால் முறைப்படி விவாகரத்து பெற முடிவு எடுக்கிறார். ஆனால் கோர்ட், 6 மாதம் இருவரையும் சேர்ந்து வாழும்படி உத்தரவு போடுகிறது. இந்த நேரம் பார்த்து, வெண்பாவும் ஜெயிலுக்கு போக பாரதியும் கண்ணம்மாவும் சேர இது ஒரு வாய்ப்பாக அமையும் என மொத்த குடும்பமும் நம்பியது. கிட்டத்தட்ட சூழ்நிலையும் அப்படி தான் அமைந்தது.

    இதையும் படிங்க.. கல்லூரி நண்பர்களுடன் மம்முட்டி - உண்மையாவே இவருக்கு 70 வயதா?

    தற்போது, பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கண்ணம்மா கூடவே இருந்தும், பாரதிக்கு கண்ணம்மா மீது நம்பிக்கை மட்டும் வருவதாக தெரியவில்லை. தொடர்ந்து அதே சந்தேக புத்தியுடன் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அதன் உச்சமாக இன்றைய எபிசோடில், கண்ணம்மா யாரோ ஆண் நண்பருடன் ஆட்டோவில் பேசி கொண்டு போவதாக நினைத்து கொண்டு, அவர்களை கையும் களவுமாக பிடிக்கிறேன் என்று காரில் ஃபலோ செய்கிறார்.

    இதையும் படிங்க..என்னை அவமானப்படுத்த முயற்சிகள் நடந்துள்ளன - மனம் திறந்த பாவனா

    கடைசியில் வழக்கம் போல் பல்பு வாங்குகிறார். கண்ணம்மாவுடன் காரில் சென்றது ஆண் நண்பர் இல்லை, பேண்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த பெண் தோழி. பார்வையில் தவறை வைத்துக்கொண்டு, கண்ணம்மாவை ஃபாலோ செய்த பாரதிக்கு கடைசியில் வழக்கம் போல் பல்பு தான் கிடைக்கிறது. ஆனாலும் கண்ணம்மா மீது நம்பிக்கை வந்த பாடில்லை. (இயக்குனரும் சீரியலை முடித்த பாடில்லை)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி