பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை பிரிந்து இருக்கும் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க புது என்ட்ரியும் வந்துள்ளார்.
இன்றைய எபிசோடில் கண்ணம்மா, வாய்தா வடிக்கரசியிடம் நேற்று ஸ்கூலில் நடந்ததை பற்றி பேசி வருத்தப்படுகிறார். அதாவது நிஜ அம்மா என தெரியாமல் பாரதியை கல்யாணம் செய்துக் கொள்ளும்படி ஹேமா கேட்டது பற்றியும், ஸ்கூல் டூர் பற்றி ஹேமா எழுதிய கட்டுரையில் சமையல் அம்மாவை பற்றியே எழுதி இருக்க, அதை பற்றி ஹேமாவின் டீச்சர் கண்ண்மாவிடம் பேசியது பற்றியெல்லாம் மனம் விட்டு பேசுகிறார். இப்படி ஒரு விஷயம் நடந்தது மட்டும் பாரதிக்கு தெரிந்தால் அவர் மொத்த பழியையும் கண்ணம்மா மீது தூக்கி போட்டுவிடுவார் என்பதே கண்ணம்மாவின் பயமாக இருக்கிறார்.
இணையத்தில் உலா வரும் தகவலின் படி, கூடிய விரைவில் லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிந்தது போலவே
ஹேமாவுக்கும் எல்லா விஷயமும் தெரிய வரும் .இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் சீரியலின் புதிய கதாபாத்திரமும் அறிமுகமாகியுள்ளார். அதாவது சவுந்தர்யா வேணுவின் கல்லூரி நண்பராக விஜய் என்ற ரோலில் சீரியலில் புது என்ட்ரி. யார் இவர்? இவர் தான் கண்ணம்மாவையும் பாரதியையும் சேர்த்து வைக்க போகிறாரா? என பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
ஓட்டு கேட்கும் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள்.. எந்த கட்சிக்காக தெரியுமா?
அதே நேரம், வெண்பாவுக்கு ஒரு நம்பரில் இருந்து ஃபோன் வருகிறது. வழக்கத்தை விட வெண்பா அந்த நம்பரை பார்த்ததும் பயத்தில் அஞ்சி நடுங்குகிறார். சாந்தி என்ன என்று விசாரித்தும் வெண்பா பதில் சொல்லவில்லை. பதிலுக்கு சாந்தியை திட்டி அனுப்புகிறார். யார் அந்த நபர்? என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.
ரோஜா-அர்ஜூனிடம் வசமாக மாட்டிக் கொண்ட அனு… விறுவிறுப்பான ரோஜா சீரியல்
அதே போல், சீரியலில் நியூ என்ட்ரிக்கும் கதையில் என்ன வேலை? என்ற தகவலும் வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். இது ஒரு புறம் இருக்க, ஹேமா பாரதிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தரவுள்ளார். அதாவது ஸ்கூல் டூரில்
கண்ணம்மா பாரதி,. ஹேமா, லட்சுமி நான்கு பேரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வீட்டில் பிரேம் செய்து மாட்டவுள்ளார். இதை பார்க்கும் பாரதியின் ரியாக்ஷன் என்ன என்பது வரும் எபிசோடில் பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.