பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிடம் பாரதி போட போகும் கண்டிஷன் என்ன? என்பதை தெரிந்து கொள்ள ஒட்டு மொத்த தமிழ் சீரியல் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனலாம்.
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிப்பரப்ப தொடங்கிய நாளிலிருந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சின்னத்திரைக்கு புது முகங்களான அருண் பிரசாத், ரோஷினி, கண்மணி ஆகியோரை முன்னிலைப்படுத்தி இயக்குனர் சீரியலை தொடங்கினார். நினைத்ததை விட சீரியல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. சீரியல் டாப் ரேட்டிங்கில் வர தொடங்கியது. அடுத்த சில மாதங்களில் விஜய் டிவி டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸை ஓரங்கட்டி பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.இப்படி சீரியல் உச்சத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் தான்கண்ணம்மாவாக நடித்த ரோஷினியின் விலகலுக்கு பிறகு சீரியல் மிகப் பெரிய அடி வாங்கியது. இதை சரிசெய்ய சீரியல் குழு போராடியது.
சீரியலை பார்க்கும் ஆடியன்ஸ் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இதை சரிசெய்ய இயக்குனர் உடனடியாக புது கண்ணம்மாவை சீரியலில் இறக்கினார். வினுஷா தேவி கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரோஷினியின் நடிப்பை எல்லா இடத்திலும் ஈடு செய்யும் அளவுக்கு தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். இவரை இப்போது ரசிகர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டனர். சீரியலும் வழக்கமான திருப்பத்துடன் பயணிக்க தொடங்கி விட்டது.
இதையும் படிங்க... எல்லை மீறும் மீனாவின் வார்த்தைகள்… ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!
கோர்டு உத்தரவை மதித்து
கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கி இருக்கிறார். இதனால் தினமும் பாரதிக்கும் - கண்ணம்மாவுக்கும் வீட்டில் சின்ன சின்ன சண்டை வருகிறது. இந்த 6 மாதத்தில் எப்படியாவது பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க நினைக்கிறார் சவுந்தர்யா. இந்த நேரத்தில் தான் நீதி காத்த அம்மன் கோயிலில் கண்ணம்மாவுக்கு நீதி கிடைக்கிறது. கண்ணம்மா தவறு செய்யவில்லை என கடவுளே பாரதிக்கு உணர்த்தி விட்டது போல் போன வார எபிசோடு ஒளிப்பரப்பானது. தற்போது இந்த வாரத்திற்கான புரமோவில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. பாரதி, கண்ணம்மாவை மன்னித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வது போல் காட்சிகள் இருந்தன.
அதுமட்டுமில்லை ஒரு மனைவியாக உன்னை ஏற்று கொள்கிறேன் என்றும் பாரதி சொல்கிறார். ஆனால் கடைசியில் ஒரு ‘க்’ வைப்பது போல், பாரதி ஒரு கண்டிஷனையும் போடுகிறார். அது என்ன கண்டிஷன் என்பது இதுவரைக்கும் ஒளிப்பரப்படவில்லை. அந்த எபிசோடுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் சனிக்கிழமை எபிசோடில் தான் பாரதி அந்த கண்டிஷனை கண்ணம்மாவிடம் சொல்வது போல் காட்சிகள் காட்டப்படவுள்ளன.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் அந்த
எபிசோடுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே போல், பாரதி சொல்ல போகும் கண்டிஷன் என்னவாக இருக்கும்? என்பதை சிலர் கருத்துக்களாக பதிவு செய்து வருகின்றனர். அதாவது, லட்சுமியை விட்டுட்டு வரும் படி பாரதி கூறுவார் , இதனால் கோபத்தில் கண்ணம்மா ,ஹேமாவும் என்னுடைய குழந்தை தான் என்ற உண்மையை சொல்லிவிடுவார். இதுதான் 2 நாட்களில் வர போகும் மிகப் பெரிய ட்விஸ்ட் என்கின்றனர். இன்னும் சிலர், பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகுது என்றும் இதுதான் கடைசி எபிசோடு என்றும் கூறிவருகின்றனர்.
`
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.