பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறார். பரபரப்பான ட்விஸ்டுகளுடன் இன்றைய எபிசோடு ஒளிப்பரப்பாகவுள்ளது.
பாரதி கண்ணம்மாவில் ஹேமா - லட்சுமி 10வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மிகப் பெரிய புயல் அடிக்கிறது. அதாவது ஹேமா தனது அம்மா பற்றி பாரதியிடம் கேட்க, பாரதி பழைய காதலி ஹேமாவின் ஃபோட்டோவை வரைந்து காட்டுகிறார். இதை கண்ணம்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லா உண்மையும் போட்டு உடைக்கிறார். தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மையை கண்ணம்மா சொல்ல பாரதி அதை நம்ப மறுக்கிறார். கடைசியில் சவுந்தர்யா எல்லா உண்மைகளையும் பாரதியிடம் சொல்கிறார்.
என் வழி ஜோதிகா வழி.. ஆச்சரியம் தந்த நடிகர் சூரியின் பேச்சு!
அதே போல் நர்ஸ் துளசியும் கண்ணம்மா பிரசவத்தில் நடந்த எல்லா பிரச்சனையும் சொல்லி ஹேமா, கண்ணம்மாவுக்கு பிறந்தவர் தான் என சொல்கிறார். இதை கேட்டு உடைந்து அழுகிறார் பாரதி. இப்படி ஒரு ஏமாற்றத்தை பாரதி எதிர்பார்க்கவில்லை. அம்மா, அப்பா என மொத்த குடும்பமும் இதை மறைத்து விட்டனர் என கதறி அழுகிறார். கடைசியில் சவுந்தர்யா கண்ணம்மாவின் கையை பிடித்து சத்தியம் வாங்குகிறார். பாரதியிடம் இருந்து ஹேமாவை பிரிக்க கூடாது என்கிறார்.
பிரபல கோவிலில் மகனுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சந்தானம்
அதற்கு கண்ணம்மா, ”அப்படி நான் ஒருநாளும் நினைத்தத்தில்லை. அவள் அவங்க அப்பா கூடதானே இருக்கா. ஹேமாவை நான் பாரதியிடம் இருந்து பிரிக்க மாட்டேன்” என்கிறார். மொத்த குடும்பத்திற்கும் உயிர் வருகிறது. அதே நேரம் பாரதிக்கு வார்னிங்கும் கொடுக்கிறார். ஒருவேளை ஹேமாவை என்னிடம் இருந்து நீங்கள் பிரிக்க நினைத்தால் விளைவு மோசமாக இருக்கும் என்கிறார். பாரதிக்கு ஷாக் தாங்கவில்லை.
கடைசியில் சிவாகாமி, சவுந்தர்யா, வேணு , சந்தியா, சரவணன் என மெகா சங்கமத்தில் இணைந்திருக்கும் அனைவரும் பாரதி - கண்ணம்மாவை சேர்ந்து வாழ சொல்லி கெஞ்சுகிறார்கள். 10 வருடம் பிரிவு போதும் இந்த குழந்தைகளுக்காவது இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.