Home /News /entertainment /

பிக் பாஸ் சீசன் 5 வெற்றி பெற்ற பிறகு ராஜு செய்த நெகிழ்ச்சியான விஷயம்...

பிக் பாஸ் சீசன் 5 வெற்றி பெற்ற பிறகு ராஜு செய்த நெகிழ்ச்சியான விஷயம்...

பிக் பாஸ் ராஜு

பிக் பாஸ் ராஜு

பிக் பாஸில் டைட்டிலுடன் 50 லட்சம் பரிசு பணத்தை வென்ற ராஜு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று கணிசமான பண உதவி செய்துள்ளார்

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் பரபரப்புக்கு இடையே வெற்றிகரமாக முடிந்தது. பலரும் எதிர்பார்க்கப்பட்ட ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5 இன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்பொழுதுமே பிக் பாஸ் சீசன் முடிவடைந்தபின் அல்லது நடந்து கொண்டிருக்கும்போதே கலந்து கொண்ட போட்டியாளர்களின் பேட்டிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருப்பார்கள்.

    நிகழ்ச்சி முடிந்த பின்னே பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள், அடுத்து திரைப்படங்களில் நடிக்கிறார்களா என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு திரைத்துறையில் பல்வேறு வாய்ப்புகளும கிடைத்துள்ளன. அடுத்தடுத்து என்ன திரைப்படங்கள் நடிக்கிறார்கள் என்பதை பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும். ஆனால் பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக ராஜு நிகழ்ச்சி முடிந்த பின்னர் எங்குமே வெளியில் தலைகாட்டவல்லை, பேட்டியும் அளிக்கவில்லை. ராஜு என்ன செய்கிறார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.

    பாவனி, ப்ரியங்கா, அமீர் உள்ளிட்ட மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் லைவாக ரசிகர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர். அதில் கூட ராஜு தோன்றவில்லை. ராஜு எப்போது ரசிகர்களுடன் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    முன்னணி சேனலின் புதிய சீரியலில் ஸ்வீட்டி? பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு குட் பை?

    வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனரான ஐசரி கணேஷ் அடுத்தடுத்து தயாரிக்கப் போகும் திரைப்படங்களில் இந்த சீசனின் போட்டியாளர்கலையே நடிக்க வைக்கலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், நடிகராக ஏற்கனவே அறிமுகமான ராஜுவின் திரைக்கதை எழுத்தாளர் முகத்தை பிக் பாஸ் 5 மூலம் அறிந்து கொண்டோம். ராஜுவின் அடுத்த திட்டங்கள் என்ன என்பது பற்றி ரசிகர்கள் மனதில் பல்வேறு கேள்விகள் உள்ளன.

    மேலும், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துவரும் ராஜு மீண்டும் சீரியலில் அதே பாத்திரத்தில் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஈரமான ரோஜாவே குழுவினர் ராஜுவிடம், ராஜாவின் கேரக்டர் துபாயில் சிறைப்பிடிக்கப்பட்டதாக கூறிச் சென்றனர். சீரியலில் அந்தப் பாத்திரம் தொடருமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. ராஜு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மீண்டும் நடிக்க வந்தால் கதைக்களத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இன்னும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

    வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!

    என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கான விடையாக, இந்த நேரத்தில் ராஜுவைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸில் டைட்டிலுடன் 50 லட்சம் பரிசு பணத்தை வென்ற ராஜு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று கணிசமான பண உதவி செய்துள்ளார் என்ற தகவல் தான் அது. விரைவில் ராஜு மீடியா மற்றும் பொதுமக்களிடம் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி