• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜீ தமிழ் 'சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு அர்ஜுன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜீ தமிழ் 'சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு அர்ஜுன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அர்ஜுன்

அர்ஜுன்

இறுதி வரை தாக்குப்பிடிக்கும் நபருக்கு சர்வைவர் பட்டத்துடன், 1 கோடி ரூபாய் பரிசும் கிடைக்கவிருக்கிறது.

  • Share this:
    ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் அர்ஜுன். இந்நிகழ்ச்சிக்காக அவர் பெறும் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 'சர்வைவர்' நிகழ்ச்சி முதன் முதலாக 2000-ம் வருடம் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட சீசன்களை கடந்திருக்கிறது இந்த 'சர்வைவர்'. தற்போது தமிழ் பார்வையாளர்களின் கவனத்தைப் பெறும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

    இதில் பெசன்ட் ரவி (ஸ்டண்ட் நடிகர்), லக்கி நாராயண், அம்ஜத் கான், விஜே பார்வதி, லக்ஷ்மி ப்ரியா, லேடி காஷ் (சிங்கப்பூர் ராப்பர்), ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி (பிகில் பட நடிகை), உமாபதி ராமையா (தம்பி ராமையா மகன்), விக்ராந்த், விஜயலட்சுமி (சென்னை 28 நடிகை), ஐஸ்வர்யா (விளையாட்டு வீராங்கனை), சரண் (நடிகர்), நந்தா, ராம். சி, இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக நுழைந்திருக்கிறார் நடிகர் அர்ஜுன். மொத்தம் 90 நாட்கள் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. தனித்தீவில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை சமாளித்து இறுதி வரை தாக்குப்பிடிக்கும் நபருக்கு சர்வைவர் பட்டத்துடன், 1 கோடி ரூபாய் பரிசும் கிடைக்கவிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ஜுனுக்கு 5 கோடி சம்பளம் வழங்கப்படுகிறதாம். அதோடு அவர் தயாரித்து, அவரது மகள் நடிக்கும் சில படங்களையும் ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: