ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளிக்கு களைக்கட்டும் கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

தீபாவளிக்கு களைக்கட்டும் கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

தீபாவளியன்று தொடர்ந்து பல திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகுகின்றன.,

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்த தீபாவளிக்கு பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் டெலிகாஸ்ட் செய்கிறது. 

  • தீபாவளி கொண்டாட்டத்தின் குதூகலத்தை இன்னும் உயர்த்த நான்கு நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் நேர்த்தியான கலவையை சின்னத்திரையில் வழங்க வயாகாம் 18-ன் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தயாராக இருக்கிறது. அளவற்ற மகிழ்ச்சியாலும், கேளிக்கையாலும் இத்திருவிழா காலத்தில் இல்லங்களை நிரப்பவேண்டுமென்ற குறிக்கோளோடு, ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றத்தை இந்த சேனல் வழங்குகிறது.

  சிம்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரீநிதிக்கு மீண்டும் சீரியலில் வாய்ப்பு!

  அதுமட்டுமின்றி, தொடர்ந்து பல திரைப்படங்கள் மற்றும் கலர்ஸ் நம்ம வீட்டு தீபாவளி என்ற சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது. அக்டோபர் 22, சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்த தீபாவளி கொண்டாட்டத்தையொட்டிய சிறப்பு நிகழ்ச்சிகள், 2022 அக்டோபர் 25 செவ்வாய் கிழமை வரை குதூகலத்தையும், கேளிக்கையையும், பொழுதுபோக்கையும் ஒன்றுசேர்த்து வழங்குவது நிச்சயம்.

  அக்டோபர் 23, ஞாயிறு காலை 11:00 மணிக்கு பீம்லா நாயக் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை இந்த சேனல் ரசிகர்களுக்காக வழங்குகிறது. நடிகர் பவன் கல்யாண், நடிகர் ராணா டகுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இதன் திரைக்கதை, ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான துணை ஆய்வாளர் பீம்லா நாயக் (நடிகர் பவன் கல்யாண்) மற்றும் ராணுவத்தில் ஹவில்தாராக முன்பு பணியாற்றிய டேனியல் சேகர் (நடிகர் ராணா டகுபதி) ஆகியோருக்கு இடையிலான மோதலையும், எதிர்ப்பு உணர்வையும் சுற்றி பிண்ணப்பட்டிருக்கிறது.

  diwali movies and special show on colors tamil

  ஊழலுக்கு சரணாகதி அடையும் வகையில் பீம்லாவை தந்திரமாக டேனியல் சிக்கவைக்கும் நிகழ்வோடு இந்த சுவாரஸ்யமான கடும் மோதல் ஆரம்பமாகிறது சண்டைக் காட்சிகள் நிறைந்த பரபரப்பு சற்றும் குறையாத இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம், ஞாயிறு தினத்தை சுவாரஸ்யமானதாக ஆக்கும் என்பது நிச்சயம்.

  பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தலைமையில் நடைபெறுகிறது. பேரானந்தம் தருவது ‘காதலா அல்லது திருமண வாழ்க்கையா’ என்ற தலைப்பில் ஆர்ஜே ஆனந்தி, கல்வியாளர் வேதநாயகி, விஜே ஆண்ட்ரூ, கல்வியாளர் கல்பனா தர்மேந்திரா, கல்வியாளர் நவ்ஜோதி மற்றும் பேச்சாளர் சசிலயா போன்ற பிரபல பேச்சாளர்கள் இதில் உரையாற்றுகின்றனர். திருமண அமைப்பு மற்றும் காதல் என்ற கருத்தாக்கம் மீது தங்களது கண்ணோட்டங்களையும் பார்வையாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இந்த சிறப்பு நிகழ்ச்சி அக்டோபர் 24, திங்கள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

  இதற்கும் கூடுதலாக, தங்களது அபிமான நெடுந்தொடர் நிகழ்ச்சிகளான வள்ளி திருமணம், மந்திரப் புன்னகை, ஜமீலா, உள்ளத்தை அள்ளித்தா, சில்லுனு ஒரு காதல், கண்ட நாள் முதல் மற்றும் பச்சகிளி ஆகியவற்றின் தங்கள் அன்புக்குரிய நடிகர் நடிகையர் பங்கேற்கும் கலர்ஸ் நம்ம வீட்டு தீபாவளி, அற்புதமான நிகழ்ச்சியில் பல்வேறு கேம்கள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்கின்றனர்.

  diwali movies and special show on colors tamil

  இத்தீபாவளிக்கு 2022 அக்டோபர் 22 சனிக்கிமை முதல், 2022 அக்டோபர் 25 செவ்வாய் கிழமை வரை உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இணைந்து குதூகலமாக பண்டிகையை கொண்டாட கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்து, மகிழ்ச்சியாலும், கேளிக்கையாலும் உங்கள் இல்லங்களை நிரப்புங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Deepavali, Diwali, Diwali movies