கவர்ச்சியில் குதித்த திவ்யா துரைசாமி - 'நமீதா' என ரசிகர்கள் புகழாரம்!

திவ்யா துரைசாமி

செய்திவாசிப்பாளராக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்த திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் நெட்டிசன்களை ஏங்கவைத்துள்ளது.

  • Share this:
தமிழகத்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய திவ்யா துரைசாமி, புகைப்படத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான லுக்குகளில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். அவரின் புகைப்படத்தை காண்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், அவரை டிரெண்டிங்கில் கொண்டுவந்துள்ளது.

அதாவது, சேலையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா. முன்பக்க புகைப்படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளார். முன்னணி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டியுள்ள திவ்யா துரைசாமியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். சமூகவலைதளங்களில் அழகு ராணியாக மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு, திடீரென வெளியிடப்பட்ட கவர்ச்சி புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூட கூறலாம்.

உடனடியாக கமெண்டுகளை அள்ளி வீசியுள்ள நெட்டிசன்கள், மேடம் நீங்கள் அடுத்த நமீதா என்று கூறி வருகின்றனர். கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கிவிட்டீர்களா? என்றும், உங்களின் ஒன்சைட் போஸ் சூப்பராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். செய்தி வாசிப்பாளராக இருந்து திரைப்படத்துறைக்குள் கால்பதித்த அவர், பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், பிரபல தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த் ஆகியோர் நடித்த இஸ்பேட் ராஜாவும், இஸ்பேட் ராணியும் திரைப்படத்தில் நடித்தார். மற்ற சில படங்களிலும் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள அவருக்கு புதிய பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது.

சிறிய ரோலில் இருந்து கதாநாயகியாக வலம் வருவதற்கு முயற்சி எடுத்தும் வரும் திவ்யா துரைசாமிக்கு, இந்த புகைப்படங்கள் மேலும் நல்ல ரீச்சைக் கொடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் அவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கலாம். செய்தி தொலைக்காட்சிகளில் இருந்து ஏற்கனவே திரைத்துறையில் நுழைந்து புகழ்பெற்றுள்ள பாத்திமா பாபு, பிரியா பவானி சங்கர்போல் திவ்யாவும் விரைவில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சிகளில் இருந்து திரைத்துறைக்கு சென்ற சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகின்றனர்.

தொலைக்காட்சிகளில் இருப்பவர்கள் திரைத்துறையில் சாதிக்க முடியாது என்ற பிம்பத்தை அவர்கள் உடைத்தபிறகு, பலரும் அவர்கள் பின்னணியில் அணிவகுத்து வருகின்றனர். அந்தவரிசையில் திவ்யா துரைசாமியும் இடம்பெற்றுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், சிறுவயது முதல் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். தன்னுடைய சுறுசுறுப்பான செயல்களால் பல்வேறு செய்தி தொலைக்காட்சிகளில் புகுந்த தற்போது சோஷியல் மீடியா ராணியாகவும் இருந்து வருகிறார்.அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்தும், சிலர் ஜூம் செய்தும் பார்த்து வருகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: