• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மோகன்லால் படத்துடன் மலையாளத்தில் கணக்கை தொடங்கும் டிஸ்னி + ஹாட்ஸ்டார்!

மோகன்லால் படத்துடன் மலையாளத்தில் கணக்கை தொடங்கும் டிஸ்னி + ஹாட்ஸ்டார்!

டிஸ்னி + ஹாட்ஸ்டார்

டிஸ்னி + ஹாட்ஸ்டார்

ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களைவிட கேரளாவில் உள்ள திரையரங்குகளே அதிகளவில் ஓடிடியால் பாதிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் இந்தியாவில் தனது வர்த்தக எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்துள்ளது. மலையாள படங்கள் எதையும் வாங்கியிராத இவர்கள் முதன்முறையாக மோகன்லாலின் படத்தை வாங்கி கணக்கை தொடங்க உள்ளனர்.

    ஓடிடி தளத்தை சரியாகப் பயன்படுத்தும் இந்திய சினிமாத்துறைகளில் ஒன்று மலையாளம். மோகன்லாலின் த்ரிஷ்யம் 2, பகத் பாசிலின் ஜோஜி, மாலிக், பிருத்விராஜின் கோல்ட் கேஸ், குருதி உள்பட பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகின. இன்னும் வெளியாக உள்ளன. இதில் அமேசான் பிரைம் வீடியோவே முன்னணியில் உள்ளது.

    த்ரிஷ்யம் 2, ஜோஜி, மாலிக், கோல்ட் கேஸ், சாராஸ், ஹோம், சன்னி போன்ற முக்கியமான படங்களை அமேசான் பிரைம் வீடியோ நேரடியாக வெளியிட்டது. பிருத்விராஜ் நடித்திருக்கும் ப்ரம்மம் உள்பட சில படங்கள் அமேசானில் விரைவில் வெளியாக உள்ளன.

    இருள், நாயாட்டு போன்ற படங்கள் நெட்பிளிக்ஸில் இந்த வருடம் வெளியாகின. மின்னல் முரளி திரைப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. முன்னணி ஓடிடி நிறுவனங்களாக அமேசானும், நெட்பிளிக்ஸும் ஏற்கனவே மலையாளத்தில் கணக்கைத் தொடங்கியிருக்க, டிஸ்னியும் தற்போது அதில் நுழைகிறது. முதல் படமாக பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்திருக்கும் ப்ரோ டாடி படத்தை டிஸ்னி வாங்கி வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் பல படங்களை வாங்கி வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களைவிட கேரளாவில் உள்ள திரையரங்குகளே அதிகளவில் ஓடிடியால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொரோனா பெருந்தொற்று கேரளாவில் குறையாமல் இருந்ததும், இன்னும் திரையரங்குகள் முழுமையாக இயங்காமல் இருப்பதும் முக்கிய காரணமாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: