முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி போட்டி.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி போட்டி.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட்

Bigg Boss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா ?

  • Last Updated :

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் கோலாகலமாக தொடங்கி தற்போது இறுதி வாரங்களில் உள்ளது. முதலில் 6 வாரம் மட்டுமே ஒளிபரப்பு என்று தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட், பின்னர் 7 வாரம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 10 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது 9ம் வார இறுதியில் இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட்டின் ஃபினாலே எப்போது என்று பலரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் அல்டிமேட்டின் இறுதிப் போட்டி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்று உறுதியான செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சி, ஞாயிறு அன்று, அதாவது ஏப்ரல் 10 அன்று ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. தற்போது, பாலாஜி முருகதாஸ், தாமரை செல்வி, நிரூப் நந்தகுமார், ஜூலி மரியானா, அபிராமி வெங்கடாசலம், மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் உள்ளனர். நேற்றைய எபிசோடில், சுருதி பெரியசாமி 15 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் வெளியேறினார். இவர்களில், ரம்யா பாண்டியன் மட்டுமே வைல்டு கார்டு போட்டியாளர்.

எஞ்சியிருக்கும் ஐந்து நபர்களுமே முதல் நாளில் இருந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிக்கு முந்தைய வாரமான இந்த வாரத்தில் டாஸ்க்குகள்

ஃபிசிக்கல் டாஸ்க்குகளாகவும், ஒருவரை ஒருவர் வாதங்கள் வைத்து தோற்கடிக்கும் போட்டிகளாகவும் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே எல்லாவற்றிலும் போட்டியாளர்களை சோதிக்கும் வாரமாக ஒன்பதாவது வாரம் காணப்படுகிறது.

also read : முதல் முறையாக இந்திய படத்திற்கு டப்பிங் பேசிய மைக் டைசன்

இந்நிலையில் ஃபைனல் போட்டியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும். தன்னுடைய அம்மா மிகவும் விரும்பியதால் தான் ஃபைனலிஸ்ட் மேடையில் ஏறுவேன் என்று போன வார எலிமினேஷன் எபிசோடில் ஹாட் சீட்டில் இருந்த ஸ்ருதி அழுதார். ஆனால் எதிர்பார்க்காத விதமாக பண பெட்டி அறிவித்தவுடன் அதற்காக போட்டியிட்டு 15,00,000 ரூபாயுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

மற்ற சீசன்களைப் போல பணப் பெட்டி அறிவித்தவுடன் இதை அப்படியே எடுத்துக் கொண்டு செல்ல முடியாது என்ற புதிய சட்டத்தை பிக்பாஸ் அல்டிமேட்ல் அறிவித்திருந்தார்.

போட்டி போட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் தான் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல முடியும் என்று அறிவித்தார். போட்டியில் ஜூலி மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். சுருதி பெரியசாமி வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோட்டில் காலையிலேயே பணத்துடன் சுருதி வெளியேறினார். வார இறுதி எபிசோடில் எபிசோடில் அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

also read : valimai OTT சாதனையால் அரண்டு போன நிறுவனம்!

அதேபோல TTF டாஸ்க் அதாவது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது என்பதை பிக்பாஸ் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க்குகள் அனைத்துமே அதற்கான போட்டிகள் போலத்தான் தெரிகிறது. ஒட்டுமொத்த டாஸ்குகளில் யார் கணிசமான வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு எலிமினேஷனில் இருந்து விலக்கு பெற்று நேரடியாக ஃபினாலேக்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம், பிக் பாஸின் வைல்ட் கார்டு போட்டியாளராக இருக்கும் ரம்யா வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

top videos

    ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று நடைபெற இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டின் கிராண்ட் ஃபினாலேவில் பிக்பாஸின் ஆஸ்தான தொகுப்பாளரான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி கமல்ஹாசன் இறுதிப் போட்டிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்பது ரசிகர்களின் ஏகோபித்த குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    First published:

    Tags: Bigg Boss Tamil, Simbu