கவின் - லாஸ்லியா காதலை சேரப்பா சேரவிடவில்லை - வசந்தபாலன் ஆதங்கம்!

news18
Updated: September 12, 2019, 3:21 PM IST
கவின் - லாஸ்லியா காதலை சேரப்பா சேரவிடவில்லை - வசந்தபாலன் ஆதங்கம்!
பிக்பாஸ்
news18
Updated: September 12, 2019, 3:21 PM IST
தமிழகத்தில் இன்னும் அனைவரது மத்தியிலும் காதல் எதிர்ப்பு உள்ளது என்று கூறியிருக்கும் இயக்குநர் வசந்தபாலன் சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்வது வாடிக்கையாகி வரும் நிலையில் இம்முறை பிக்பாஸ் வீட்டின் மன்மதன் டைட்டிலை கவின் பெற்றுள்ளார்.

இதனிடையே நேற்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தனர். அப்போது லாஸ்லியா - கவின் காதல் குறித்து வெளிப்படையாக பேசாவிட்டாலும் இதை ஒரு கேம் என நினைத்து விளையாடிவிட்டு வெளியே வருமாறு லாஸ்லியாவுக்கு அறிவுரை கூறினர்.
10 வருடங்கள் கழித்து லாஸ்லியா தனது தந்தை மரியநேசனை சந்தித்ததும், இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்களும் இயல்பான சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தன. மேலும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் வாழும் ஒட்டுமொத்த தந்தை - மகள்களின் உறவை அக்காட்சிகளில் காண முடிந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் காதல் குறித்தும் நேற்றைய நிகழ்ச்சி குறித்தும் பிரபல இயக்குநர் வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Loading...

இயக்குநர் வசந்தபாலன்


அதில் அவர் கூறியிருப்பதாவது, “கேரள பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய, கொண்டாடிய தருணங்களை பார்கையில்,எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல்.பார்க்க பார்க்க தித்திக்கும் காதல்.

ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா,கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே “லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?...கேமை கவனித்து விளையாடுங்க” என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது.முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.

இன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.“வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை! ஏன் இப்படி மாறுனே? என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள். லாஸ்லியா செய்வதறியாது தவித்தாள். எப்படி போனே? அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள்.

லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். ஆனந்த யாழை மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதைவரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான்.சியர்ஸ்...

அவரும் மகளின் காதலை விரும்பவில்லை. உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார். என்ன மகளே! கையில வேர்க்கிது? என்று கேட்க ‘சின்ன வயசுல இருந்து அப்படி தான்பா உள்ளங்கைல வேர்க்கும்’ என்றாள் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள்.

ஆக தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாக தான் உள்ளது.
பிக்பாஸ் என்ன செய்ய?

அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே?

காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது" இவ்வாறு தனது பதிவில் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க: புதிய மோட்டார் வாகன சட்டம்... மற்ற மாநிலங்கள் கூறுவது என்ன?

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...