பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியுமா...? சேரனுக்கு பிரபல இயக்குநர் உருக்கமான கோரிக்கை

"குறிப்பாக சேரனை, சரவணன் ஒருமையில் திட்டியது பரபரப்பாக பேசப்பட்டது"

news18
Updated: August 3, 2019, 8:53 AM IST
பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியுமா...? சேரனுக்கு பிரபல இயக்குநர் உருக்கமான கோரிக்கை
இயக்குநர் சேரன்
news18
Updated: August 3, 2019, 8:53 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது என்று சேரனுக்கு, இயக்குநர் வசந்தபாலன் அறிவுரை வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கியது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இரண்டாவது வாரத்தின் இறுதியில் முதல் ஆளாக பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீராமிதுன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.


இந்த வாரம் கவின், ஷாக்சி, மதுமிதா, அபிராமி, ரேஷ்மா உள்ளிட்ட 5 நபர்கள் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.

சில நாட்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இயக்குநர் சேரண் மற்றும் நடிகர் சரவணன் இடையேயான பிரச்னையை மையப்படுத்தி நிகழ்ச்சி நகர்கிறது. குறிப்பாக சேரனை, சரவணன் ஒருமையில் திட்டியது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், சேரனுக்கு பிரபல இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

Loading...“அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.
காற்றின் ரகசியப் பக்கங்களில்
இந்த செய்தி ஊடேறி
உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.
உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.
வித்யாகர்வத்துடன்
நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது.
பருந்து பறக்கும்
வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா,பொற்காலம்,ஆட்டோகிராப்
என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.
திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு
அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான்
உங்களையும்
உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.
இயக்குநர் மகேந்திரன்,
இயக்குநர் பாலுகேந்திராவுடன்
ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.
பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு
உங்களின் உயரம் தெரியாது.
நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள்.
அறியாமை என்ன செய்ய......
உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில்
கௌரவக்குறைவு ஏற்பட்ட போது
உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்.
ஆகவே கலைஞன் எந்த நிலையிலும்
அவனின் மேன்மையை
எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்” என்று வசந்த பாலன் எழுதியுள்ளார்.

ஆல்பம், வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், அரவான் ஆகிய படங்களை இயக்கியுள்ள வசந்தபாலன் தற்போது ஜெயில் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூக ஊடகங்களில் வைரலாகும் மீம்ஸ்கள்: 
First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...