ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேவயானி மேடம் குழந்தை மாதிரி.. மேடை ஏறி ரகசியம் சொன்ன எஸ்.ஜே சூர்யா!

தேவயானி மேடம் குழந்தை மாதிரி.. மேடை ஏறி ரகசியம் சொன்ன எஸ்.ஜே சூர்யா!

எஸ்.ஜே சூர்யா - தேவயானி

எஸ்.ஜே சூர்யா - தேவயானி

எஸ். ஜே சூர்யாவும் தேவயானியும் இதற்கு முன்பு நியூ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஜே சூர்யா நடிகை தேவயானி குறித்து பல விஷயங்களை மேடையில் ஷேர் செய்துள்ளார்.

  சின்னத்திரை தொலைக்காட்சியில் தனக்கென தனி இடத்தை பிடித்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ஜீ தமிழ் டிவி சேனல் தற்போது 15 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தருணத்தை கொண்டாடும் வகையில் இதற்கு பங்காற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ’ஜீ தமிழ் சாம்ராஜ்ஜியம் ’என்ற பெயரில் பிரம்மாண்ட விழா ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஜீ தமிழ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஃபிக்‌ஷன், நான் ஃபிக்‌ஷன் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து விழாவில் கலந்து கொண்டனர்.

  வெண்பா கல்யாணம்.. பாரதியின் டிஎன்ஏ டெஸ்ட்! கிளைமாக்ஸை நோக்கி நகரும் பாரதி கண்ணம்மா

  இவர்களுக்கு விருது கொடுத்து பாராட்ட வெள்ளித்திரை பிரபலங்களும் அழைக்கப்பட்டன. பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சி வரும் சனி மற்றும் ஞாயிறு ஜீ தமிழில் டெலிகாஸ்ட் ஆகிறது. இதுக் குறித்த புரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் நடிகை தேவயானி நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் குழுவுக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை தருபவர் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா.

  எஸ். ஜே சூர்யாவும் தேவயானியும் இதற்கு முன்பு நியூ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதில் சிறு வயது எஸ்.ஜே சூர்யாவுக்கு தேவயானி தான் அம்மா. இதுமட்டுமில்லை ஆரம்ப காலங்களில் தேவயானி நடித்த சில படங்களில் எஸ்.ஜே சூர்யா துணை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by zeetamil (@zeetamizh)  இப்படி இருக்கையில் மேடையில் தேவயானி பற்றி பேசும் எஸ்.ஜே சூர்யா ”தேவயானி மேடம் குழந்தை மாதிரி “ என்கிறார். ”இந்த மேடையில் தேவயானி மேடமையை நீண்ட நாளுக்கு பிறகு சந்தித்ததில் நான் ரொம்ப ஹேப்பி” என்கிறார். பதிலுக்கு தேவயானி “என் பையனை பார்த்துட்டேன்” என்று நியூ படத்தை குறிப்பிட்டு சொல்கிறார். பின்பு புதுப்புது அர்த்தங்கள் குழுவுக்கு எஸ்.ஜே சூர்யா தனது கையால் விருதை வழங்குகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Zee tamil