கமலை ஒருமையில் பேசியதால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டாரா? - விஜய் பட இயக்குநர் பதில்

news18
Updated: August 8, 2019, 7:11 PM IST
கமலை ஒருமையில் பேசியதால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டாரா? - விஜய் பட இயக்குநர் பதில்
நடிகர் சரவணன்
news18
Updated: August 8, 2019, 7:11 PM IST
சமீபத்தில் நடிகர் சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் சேரன் மீது மீரா மிதுன் வைத்த குற்றச்சாட்டு சர்ச்சையானதை அடுத்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமல்ஹாசன் போட்டியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேருந்தில் செல்லும் போது இதெல்லாம் சகஜம். ஒரு சிலர் தவறான எண்ணத்துடன் நடந்து கொள்வதும் உண்டு” என்றார்.

அதற்கு நடிகர் சரவணனும் கைகளை உயர்த்தி நானும் அப்படியெல்லாம் செய்திருக்கிறேன் சார் என்று கமல்ஹாசனிடம் கூறினார். சரவணன் இவ்வாறு வெளிப்படையாக பேசிய விவகாரம், சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதற்காக மறுநாளே சரவணனும் மன்னிப்பு கேட்டார்.


இந்நிலையில் கடந்த திங்களன்று சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதற்காக சரவணனை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், “பெண்களைப் பற்றிய தவறான கருத்துகளைக் கூறியதால், பிக்பாஸ் குழு உங்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இப்படியே சென்று விடுங்கள்” என்று கூறினார். இப்படியே சென்று விடுங்கள் என்று கூறியதற்கு மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து வெளியேறினார் சரவணன்.சரவணன் வெளியேற்றப்பட்ட விவகாரம் பார்வையாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் நிகழ்ச்சியின்போது கமல்ஹாசனை ஒருமையில் பேசியதால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டதாக வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் வைரலானது.

Loading...

இதுகுறித்து தனியார் இணையதளம் ஒன்றுக்கு இயக்குநர் பேரரசு பேட்டியளித்துள்ளார். அப்போது கமல்ஹாசனை ஒருமையில் பேசியதால் தான் நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலளித்த இயக்குநர் பேரரசு, “கமல் மிகப்பெரிய நடிகர், அவர் ஒரு லெஜெண்ட் அவரை சரவணன் அப்படி பேசினாரா என்பது சந்தேகம் தான். சேரன் பெரிய இயக்குநராக இருந்தாலும், சரவணன் ஹீரோவாக நடித்த படத்தில் சேரன் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அதன் காரணமாக அவர் பேசியிருக்கலாம். ஆனால் கமல்ஹாசன் அப்படி அல்ல. மேலும் சரவணன் கமல்ஹாசனைத் தான் அப்படி பேசினாரா என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் அந்த வீடியோ கொஞ்சம் லாங்கா இருந்தது.

பிக்பாஸில் பணியாற்றுபவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர் உண்மையாக அப்படி பேசியிருக்கும் பட்சத்தில் அதன்காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கக் கூடும். பேருந்தில் இடித்தேன் என்பது பெரிய காரணமில்லை. அப்படி இருந்தால் உடனே அவரை வெளியேற்றியிருக்க வேண்டும்” என்றார்.

வீடியோ பார்க்க: அஜித் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...