பிக்பாஸ் வீட்டில் மயங்கி விழுந்த சேரன்... அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

45-வது நாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழு முதல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

news18
Updated: August 7, 2019, 10:55 AM IST
பிக்பாஸ் வீட்டில் மயங்கி விழுந்த சேரன்... அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!
மயங்கி விழுந்த இயக்குனர் சேரன்
news18
Updated: August 7, 2019, 10:55 AM IST
பிக்பாஸ் வீட்டில் சேரன் தீடீரென மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலில் பாத்திமா பாபுவும் அவரைத் தொடர்ந்து வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா உள்ளிட்ட போடியாளர்கள் எவிக்‌ஷன் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கமலுடன் நடந்த உரையாடலின் போது நடிகர் சரவணன் தானும் கல்லூரி படிக்கும் காலத்தில் பேருந்தில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டியதாக தெரிவித்தார்.


சரவணனின் இந்த பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க சொன்ன பிக்பாஸ் நிகழ்ச்சி குழு. தொடர்ந்து அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பிறகும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எதிர்ந்ததால் அவரை நேற்று முந்தினம் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

சரவணனுடன் 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் 45-வது நாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 5 அணிகளாக பிரிந்து போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.

Loading...அந்த போட்டியின் போது சேரன் கீழே மயங்கி விழுந்ததால் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களிடையே பதற்றம் நிலவியது.

Also see...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...