• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பெற்றோருக்காக வாய்ப்பை மறுத்த சஹானா... சிவா - சஹானா ஃபேன்ஸூக்கு இதுப்பற்றி தெரியாதா?

பெற்றோருக்காக வாய்ப்பை மறுத்த சஹானா... சிவா - சஹானா ஃபேன்ஸூக்கு இதுப்பற்றி தெரியாதா?

நவீன் - சஹானா

நவீன் - சஹானா

சின்னத்திரையில் ஒரு ஜோடி ஃபேம்ஸ் ஆகிவிட்டால் வழக்கமாக பரவும் தகவல் போல

  • Share this:
    சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட சஹானா பற்றி பலருக்கும் தெரியாதவை

    சின்னத்திரையில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஜோடியாக வலம் வருபவர்கள் சிவா - சஹானா. இந்த ஜோடிகளுக்கு சீரியல் மூலம் கிடைத்திருக்கும் ரீச் அனைவராலும் கவனிக்கப்படுகிறது. இவர்களின் நடிப்பில் முதல் சீசன் நிறைவடைந்தை தொடர்ந்து, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2 ஆவது பாகமும் தற்போது ஒளிப்பரப்பட்டு வருகிறது. இதயத்தை திருடாதே சீரியலில் சஹானா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹிமா பிந்து. இவரின் சொந்த ஊர் ஆந்திரா. இவரின் மொத்த குடும்பமும் கலைக் குடும்பம் தான்.

    ஆரம்ப கால சினிமாவிலிருந்தே இவரின் தாத்தா, குடும்பத்தில் இருக்கும் பலரும் நடித்து வருகின்றனர். அதனால் தான் என்னவோ இவருக்கும் சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆசை. பிடித்தமான டான்ஸ், ஆக்டிங் எல்லாவற்றையும் விரும்பி கற்றுக்கொண்டார். பேஷன் டிசைனிங் முடித்த உடனே பிந்துவுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் பெற்றோருக்காக அதை மறுத்தார். காரணம், அவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் அறிவுருத்தியதால் வாய்ப்பை வேண்டாம் என்றார். அப்போது தான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ‘ஐஆர் 8’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதனைத்தொடர்ந்து கலர்ஸ் சேனலின் இதயத்தை திருடாதே சீரியலில் சஹானா ரோலில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. மராத்தியில் ஒளிப்பரப்பான ஹிட் சீரியலின் தமிழ் ரீமேக் தான் இதயத்தை திருடாதே. மோதலில் தொடங்கி காதல் என்பது போல் இந்த சீரியலில் சிவா - சஹானா ஜோடியை ரசிகர்கள் பயங்கரமாக ரசிக்க தொடங்கினர். சிவா மற்றும் சஹானா ஆகிய இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    HB இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@himabindhu____)






    600 எபிசோடுகளை கடந்து சீசன் 1 முடிவடைந்த நிலையில் தற்போது சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடித்த நவீன், ஹிமா பிந்துவே சிவா மற்றும் சஹானாவாக தொடர்கின்றனர். சீரியலைத் தொடர்ந்து சஹானாவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவரின் ரீல்ஸ்க்கு தனி ஃபேன்ஸ் உண்டு. இன்ஸ்டாவில் அவ்வப்போது லைவில் ரசிகர்களுடன் உரையாடுவார். சீரியலை போலவே நிஜத்திலும் நவீன் - பிந்து காதலிப்பதாக, இவங்க அடுத்த ரியல் பேர் ஆக போவதாக ஏகப்பட்ட வதந்திகள் பரவின. சின்னத்திரையில் ஒரு ஜோடி ஃபேம்ஸ் ஆகிவிட்டால் வழக்கமாக பரவும் தகவல் போல என எண்ணி இருவரும் அதை கண்டுக்கொள்ளலாம் தங்களது வேலையை தொடர்ந்து விருப்பத்துடன் செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: