Home /News /entertainment /

சுயநலவாதியாக தனத்தை மாற்றும் அம்மா.. கோபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி!

சுயநலவாதியாக தனத்தை மாற்றும் அம்மா.. கோபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தை பிரிக்க பிளானுடன் வீட்டுக்கு வருகிறார் தனத்தின் அம்மா.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணியை சுயநலவாதியாக மாற்ற முயற்சி செய்கிறார் அவரின் அம்மா. இதை கேட்டு மூர்த்திக்கு கோபம் வருகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் மூர்த்தியின் குழந்தை பாண்டியனுக்கு காய்ச்சல் அடிக்கிறது. மொத்த குடும்பமும் பதறி போகிறது. எல்லோரும் எப்படி எப்படியோ சமாதானம் செய்கின்றனர். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. இந்த நேரத்தில் தான் மீனா, குழந்தைக்கு உத்தரம் கொடுக்கலாம் என்கிறார். அப்படியாவது காய்ச்சல் குறையும் என நினைத்து அதையும் செய்கின்றனர். ஆனால் குழந்தை விடாமல் அழுகிறது. உடனே தனம், குழந்தையை ஆஸ்பிட்டல் அழைத்து செல்கிறார். அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு கொசு கடித்ததால் தான் இப்படி நடந்துள்ளது என்கின்றனர்.

    இதையும் படிங்க.. இனிமேல் என்னை வெறுப்பீர்கள்.. பிரபல சின்னத்திரை நடிகையின் ஷாக்கிங் பதிவு!

    உடனே இருவரும் வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர். கண்ணன் - ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு அவர்களுக்கு ரூம் இல்லை என்ற காரணத்தினால் தனம், அவர்கள் ரூமை கண்ணனுக்கு தந்துவிட்டு குழந்தையுடன் வெளியில் தூங்குகிறார். அதனால் தான் குழந்தையை கொசு கடித்து காய்ச்சல் வரும் அளவுக்கு சென்றது. இந்த உண்மையை தனம் தனது அம்மாவிடம் கூறுகிறார். அதை கேட்ட அவர், வழக்கம் போல் தனம் ஏமாளி என திட்டி தீர்க்கிறார்.

    ரூம் கூட இல்லாமல் குழந்தையுடன் எப்படி கொசு கடியில் படுக்கிறீர்கள் என மூர்த்தியையும் தனத்தையும் அவர் திட்ட, கூடவே அத்தாச்சி சண்டையை மூட்டி விடுகிறார். அந்த நேரம் பார்த்து வீட்டில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் இல்லை. இவர்கள் வந்ததால் தான் இந்த பிரச்சனை எனவும் மூர்த்தி காதில் விழும்படி பேசுகிறார். தனத்தின் அம்மா, இனியும் நீ மொத்த குடும்பத்திற்காக வாழ்ந்ததும் போதும், உனக்காவும் கொஞ்சம் வாழ பாரு, என குடும்பத்தை பிரிக்கும்படியே பேசுகிறார். இது எல்லாவற்றையும் மூர்த்தி ஒருபக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இதையும் படிங்க.. சரஸ்வதிக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி.. தமிழ் இப்படி செய்யலாமா?

    அவருக்கு தனத்தின் அம்மா பேச்சை கேட்டு கோபம் வருகிறது. தனத்தின் முகத்திற்காக அமைதியாக இருக்கிறார். இது தனத்துக்கும் புரிகிறது. இந்த பிரச்சனையை பெரிதாக்கி, கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் பிரித்து தனியாக அனுப்பிட வேண்டும் என அத்தாச்சி பிளான் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி