ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அப்பா இருக்காரு.. வசதியான வீட்டு பொண்ணு தான்! அப்ப தனலட்சுமி பிக் பாஸில் சொன்னது எல்லாமே பொய்யா?

அப்பா இருக்காரு.. வசதியான வீட்டு பொண்ணு தான்! அப்ப தனலட்சுமி பிக் பாஸில் சொன்னது எல்லாமே பொய்யா?

பிக் பாஸ் தனலட்சுமி

பிக் பாஸ் தனலட்சுமி

தனலட்சுமி துரோகி என்றும் அவர் எங்களையும் ஏமாற்றிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் தனலட்சுமி பிக் பாஸ் ஷோவில் சொன்னது எல்லாமே பொய் என அவரின் நண்பர்கள் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.

  30 நாட்களை கடந்து மிகப் பெரிய வரவேற்புடன் டெலிகாஸ்ட் ஆகி வரும் பிக் பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தவர் தனலட்சுமி. டிக் டாக் பிரபலமான இவர் இன்ஸ்டாகிராமில் படு ஃபேம்ஸ். பொதுமக்களும் இந்த முறை பிக் பாஸில் கலந்து கொள்ளலாம் என வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த கேட்டகிரியில் தனலட்சுமி மற்றும் ஷிவினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை இருவருமே மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு கலக்கி வருகின்றனர். அதிலும் தனலட்சுமி பற்றி சொல்லவே வேண்டாம் சண்டை, சர்ச்சை, வாதம், அடிதடி, சண்டை என பிக் பாஸில் போட்டியாளர்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து பொறுத்தமும் அவருக்கு இருக்கிறது.

  திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி.. சாட்சி கையெழுத்து போட்ட சீரியல் நடிகர்!

  இந்நிலையில் கதை சொல்லட்டுமா டாஸ்கில் தனலட்சுமி தனது வாழ்க்கை பற்றி பேசி இருந்தார். அவருடைய கதையை  மற்ற ஹவுஸ்மேட்களும் உன்னிப்பாக கவனித்தனர். அந்த டாஸ்கில்  தனலட்சுமி கதை கேட்கப்பட்டதால் அவர் சேவ் செய்யப்பட்டார். அவர் கூறிய கதையில் தனக்கு அப்பா இல்லை என்றும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கண்கலங்கி கூறி இருந்தார். அதுமட்டுமில்லை இந்த பிக் பாஸில் கலந்து கொள்ள கடன் வாங்கி பணத்தை செலவு செய்ததாகவும், கடன் வாங்கிய பணத்தில் தான் புது ட்ரெஸ் எடுத்து ஷோவுக்கு வந்ததாக மிகவும் உருக்கமாக கூறியிருந்தார். தனத்தின் கதை அனைவரையும் உருக வைத்தது.
   
  View this post on Instagram

   

  A post shared by Dhanalakshmi (@__.dhanalakshmi__)  இந்நிலையில் தனலட்சுமி சொன்ன கதை எல்லாமே பொய் என அவரின் நண்பர்கள் யூடியூப்பில் பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியில் தனலட்சுமி துரோகி என்றும் அவர் எங்களையும் ஏமாற்றிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லை பிக் பாஸில் தனலட்சுமி சொன்ன வாழ்க்கை கதை பற்றியும் அவர்களிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்கள் ”தனலட்சுமி ரூ. 12,000க்கு கூட செருப்பு வாங்குவார். அப்பா இருக்கிறார். மெக்கானிக் ஷாப் வைத்து இருக்கிறார். வசதியான வீட்டு பெண் தான். 2 படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறார்” என குண்டை தூக்கி போட்டுள்ளனர். இதில் யார் சொல்வது உண்மை? என்பது தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் இருந்து  வெளியே வந்த பின்பு தான் தெரியும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv