• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கணக்கு ஆசிரியர் டியூசனில் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்... சீரியல் நடிகை பகீர் தகவல்

கணக்கு ஆசிரியர் டியூசனில் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்... சீரியல் நடிகை பகீர் தகவல்

தேவோலீனா பட்டாச்சார்ஜி

தேவோலீனா பட்டாச்சார்ஜி

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகை தேவோலீனா (Devoleena Bhattacharjee), உங்கள் குழந்தைகள் இத்தகைய சூழல்களை எதிர்கொண்டால் தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

  • Share this:
    பரத நாட்டிய கலைஞரும் பிரபல சீரியல் நடிகையுமான தேவோலீனா (Devoleena Bhattacharjee) , சிறு வயதில் தனது கணக்கு ஆசிரியர்  தகாத முறையில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக Ladies Vs Gentlemen Season 2  நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்தார்.

    பிரபல இந்தி தொலைக்காட்சி சீரியல் நடிகையும் பரத நாட்டிய கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, Ladies Vs Gentlemen Season 2  ரியாலிட்டி நிகழ்ச்சியில் சிறுவயதில் தான் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து கூறியுள்ளார். அதில், "எனது கணித ஆசிரியர் மிகவும் சிறப்பானவர். அதனால், எல்லோரும் அவரிடம் டியூசனுக்கு செல்வார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள் மற்றும் எனது இரு தோழிகளும் அவரிடம் டியூசனுக்கு சென்றனர்.  ஆனால், ஒரு வாரத்தில் எனது தோழிகள் டியூசன் செல்வதை நிறுத்திவிட்டனர். ஒரு வாரம்தான் டியூசன் சென்றார்கள். அதன்பின்னர் அங்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.

    பின்னர் நான் டியூசன் சென்றேன். அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.  இது குறித்து தனது தாயாரிடம் நான் கூறினேன். பின்னர் இருவரும் ஆசிரியரின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம்  முறையிட்டோம். அவ்வளவுதான் நடைபெற்றது. நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் எனது இரு தோழிகளும் அங்கு உள்ளனர். ஒருவேளை அவர்களுக்கும் அது நடந்திருக்கலாம், பின்னர் அவர்கள் டியூஷனை விட்டு வெளியேறியிருக்கலாம்.

    சமூகம் என்ன கூறும், குடும்பனத்தினர் என்ன கூறுவார்கள் என்ற அச்சத்தில் எனது தோழிகளுக்கு இதை என்னிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனது குடும்பத்தினரும் அப்படிதானே நினைத்திருப்பார்கள். அதனால்தான் அவர்கள்  போலீசிடம் சென்று புகார் அளிக்கவில்லை. ஆனால், எனக்காக இருந்து கடுமையாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று இப்போது எண்ணுகிறேன்’ என அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: வாய்வழி உறவு தீவிர குற்றமல்ல: போக்சோ குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம்!


    மேலும், பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், உங்கள் குழந்தைகள் இத்தகைய சூழல்களை எதிர்கொண்டால் தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: