சன் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வரும் சினிமா நடிகை

சன் டிவியின் ‘அன்பே வா’ சீரியலில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார் திரைப்பட நடிகை டெல்னா டேவிஸ்.

சன் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வரும் சினிமா நடிகை
நடிகை டெல்னா டேவிஸ்
  • Share this:
சன் தொலைக்காட்சியில் நவம்பர் 2-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் ‘அன்பே வா’. இத்தொடரில் விராட் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குரங்கு பொம்மை பட ஹீரோயின் டெல்னா டேவிஸ் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் சீரியல் ஆகும்.

மேலும் வினயா பிரசாத், ஆனந்த், கன்யா, பிக்பாஸ் ரேஷ்மா, கவுசல்யா செந்தாமரை உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இத்தொடரின் கதைப்படி நாயகி பூமிகா (டெல்னா டேவிஸ்) கிராமத்து சூழலில் வளர்ந்த தன்னம்பிக்கையுள்ள பெண்ணாகவும், ஹீரோ விராட் பணக்கார சூழலில் வளர்ந்த ஆடம்பர இளைஞனாகவும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒரே சூழலில் வாழ நேரிடுகிறது. இருவரும் இணைந்தார்களா என்பதுதான் ‘அன்பே வா’ சீரியலின் கதை.


சரிகமா இந்தியா நிறுவனம் சார்பாக தயாரிக்கப்படும் ‘அன்பே வா’ தொடர் நவம்பர் 2-ம் தேதி முதல் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கு விளம்பரம் செய்ய நடிகர் பிரபு, சுஹாசினி, சிபிராஜ், சதீஷ் உள்ளிட்டோரை சன் டிவி களமிறக்கியிருக்கிறது.


மேலும் நவம்பர் 2-ம் தேதியிலிருந்து ‘கண்ணான கண்ணே’ என்ற சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் சன் டிவி தெரிவித்துள்ளது.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading