ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அருள் நிதியின் சஸ்பென்ஸ் திரில்லர் 'தேஜாவு’.. பிரபல டிவி சேனலில் ஒளிப்பரப்பு!

அருள் நிதியின் சஸ்பென்ஸ் திரில்லர் 'தேஜாவு’.. பிரபல டிவி சேனலில் ஒளிப்பரப்பு!

தேஜாவு

தேஜாவு

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழில் “தேஜாவு’ திரைப்படத்தை கண்டு மகிழ தயாராக இருங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மர்மமும் திகிலும் நிறைந்த ‘தேஜாவு’ திரைப்படத்தை உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ். வரும் அக்டோபர் 2–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி அன்று மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் படத்தை பார்த்து மகிழுங்கள்

  ஞாயிற்றுக்கிழமை அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பார்வையாளர்கள் குடும்பத்தினருடன் இணைந்து விடுமுறை நாளை மகிழ்ச்சியோடு கழிக்கும் வகையில், உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘தேஜாவு’ திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தமிழ். அருள்நிதி, மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள மர்மமும் திகுலும் நிறைந்த இத்திரைப்படத்தை சிறப்பு விளம்பரதாரராக பிரித்வி இணைந்து வழங்குகிறது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று மதியம் 2 மணிக்கு உங்கள் கலர்ஸ் “தேஜாவு’ திரைப்படத்தை கண்டு மகிழ தயாராக இருங்கள்

  கோபி - ராதிகா கல்யாணம்.. பாக்கியலட்சுமியில் பரபரப்பு ட்விஸ்ட்!.

  2022–ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ளார். இதில் நடிகை மதுபாலா, நடிகர்கள் அச்யுத் குமார், காளி வெங்கட் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஒருவர் கற்பனையாக எழுதும் அனைத்து சம்பவங்களும் யதார்த்த வாழ்வில் நிகழ்வதைச் சுற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எழுத்தாளர் சுப்பிரமணியாக நடிகர் அச்யுத் குமார் நடித்துள்ளார். அவர் எழுதும் கற்பனை கதையின் கதாபாத்திரங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்வில் தன்னை வந்து அச்சுறுத்துவதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். அவர் கூறுவதை அங்குள்ள யாரும் நம்பவில்லை.

  dejavu tamil movie on colors tamil coming sunday arulnithi Dejavu Colors Tamil brings the world television premiere
  தேஜாவு

  இந்த நிலையில், கடத்தப்பட்ட ஒரு பெண் தப்பி வந்து காவல் நிலையத்தில், தான் கடத்தப்பட்டதில் எழுத்தாளர் சுப்பிரமணிக்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுகிறார். அப்போது, போலீஸ் அதிகாரி நடிகை மதுபாலா மகள் ஸ்ம்ருதி வெங்கட் கடத்தப்படுகிறார். அவளை கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரி விக்ரம் குமாராக நடிகர் அருள்நிதி வருகிறார். சுப்ரமணியின் கற்பனை கதை எப்படி யதார்த்த வாழ்வில் உயிர் பெறுகிறது என்பதும் விக்ரம் தனது விசாரணையில் அவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுமே இப்படத்தின் மீதிக் கதையாகும்.

  அவளின் நன்மைக்காக தான் இந்த முடிவை எடுத்தேன்.. அப்பாவுடன் இருக்கும் வனிதாவின் 2வது மகள்!

  இந்தப்படம் குறித்து இதன் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “ஒரு புதிய கதையை வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் வெளிப்பாடே இந்த தேஜாவு திரைப்படம். வித்தியாசமான எனது கதைக்கு இதில் நடித்துள்ள நடிகர்கள் மேலும் சிறப்பு சேர்த்துள்ளனர். அத்துடன் ஜிப்ரானின் பின்னணி இசை இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் எனது படம் ஒளிபரப்பாவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். திகில் மற்றும் மர்மம் நிறைந்த இந்த படம் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்று ஒருவித பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்“.

  இது குறித்து நடிகர் அருள்நிதி கூறுகையில், “இந்தப்படம் ஒரு தனித்துவமான கதையை கொண்ட படம் ஆகும். இந்த கதை குறித்து முதலில் கேட்டபோது பெரிதாக எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால் அதை படம்பிடிக்கும்போது மிகுந்த சவாலாகவும் அத்துடன் மிகவும் வேடிக்கையாகவும் இருந்தது. கலர்ஸ் தமிழில் ஒளிரப்பாக உள்ள தேஜாவு திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினர் அனைவரையும் இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்று வார இறுதியை உற்சாகமானதாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்“ .

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Tamil movies