Rekha Krishnappa: மீண்டும் களத்தில் இறங்கிய அண்ணியார் - ரேகா கிருஷ்ணப்பாவின் புதிய சீரியல்!

கிருஷ்ணப்பா

'தெய்வமகள்’ சீரியலில் அண்ணியாராக நடித்து தொலைக்காட்சி ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த நடிகை ரேகா கிருஷ்ணப்பா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளார்.

  • Share this:
    'தெய்வமகள்’ சீரியலில் அண்ணியாராக நடித்து தொலைக்காட்சி ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த நடிகை ரேகா கிருஷ்ணப்பா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளார்.

    ரேகாவுக்கு அறிமுகமே தேவையில்லை. அந்தளவுக்கு அண்ணியார் கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்த அவர், தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறங்கி விட்டார்.

    ரேகா நடிக்கும் புதிய சீரியலை பிரபல இயக்குனர் குமரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ’தென்றல்’, ’தெய்வமகள்’ மற்றும் ’நாயகி’ போன்ற பல வெற்றிகரமான சீரியல்களை இயக்கியுள்ளார்.

    Varalaxmi Sarathkumar: திருமண விழாவில் கவனம் ஈர்த்த வரலட்சுமி சரத்குமாரின் க்யூட் டான்ஸ்!




    ரேகா கிருஷ்ணப்பா நடிக்கும் புதிய சீரியலுக்கு ‘தமிழும் சரஸ்வதியும்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரேகாவைத் தவிர, இதில் ’தென்றல்’ புகழ் தீபக் தினகர் மற்றும் ’நாயகி’ புகழ் நக்‌ஷத்ரா நாகேஷ் ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த புதிய சீரியல் ஏப்ரல் மத்தியிலிருந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    'அதே குழு விரைவில் மகிழ்விக்க வருகிறது’ எனும் தலைப்பில் ரேகா தற்போது சீரியல் குழுவினருடன் எடுத்துக் கொண்ட படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: