Home /News /entertainment /

நயன்தாரா கல்யாணத்தில் அந்த பிரபலத்தை கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்திய டிடி!

நயன்தாரா கல்யாணத்தில் அந்த பிரபலத்தை கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்திய டிடி!

டிடி திவ்யதர்ஷினி

டிடி திவ்யதர்ஷினி

ஷாரூக்கானை கட்டி பிடித்து தனது அன்பை டிடி வெளிப்படுத்தி இருக்கிறார்.

    நயன்தாரா திருமணத்தில் ஆங்கர் டிடி பாலிவுட் சூப்பர் ஸ்டாரை கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை டிடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

    விஜய் டிவி சீனியர் ஆங்கர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நயன்தாராவுக்கு ரொம்ப குளோஸ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. விக்கி - நயன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கூட டிடி கட்டாயம் இருப்பார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைப்பெற்ற நயன் - விக்கி கல்யாணத்தில் ஆங்கர் டிடியும் கலந்து கொண்டார். மகாபலிபுரத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைப்பெற்றது. அப்போது டிடி காரில் திருமணத்திற்கு வந்த புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகின. டிடி மட்டுமில்லை நயன் - விக்கி கல்யாணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.

    அந்த நிகழ்ச்சிக்கு சித்து - ஸ்ரேயா தான் வரவேண்டும்.. அடம் பிடிக்கும் ரசிகர்கள்!

    அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானும் ஒருவர். இவர் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து இறங்கினார். பின்பு நயன் - விக்கி ஜோடியை வாழ்த்தி அன்றே மும்பை திரும்பினார். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். இந்த நட்பின் பேரில் தான் ஷாரூக், நயன்தாரா கல்யாணத்திற்கு வருகை தந்திருந்தார். ஷாரூக்கான் நயன் கல்யாணத்தில் அட்லீயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் அந்த சமயம் வைரலானது.

    வந்த முதல் நாளே வேலையை ஆரம்பித்த பொன்னி.. ஷாக்கில் சின்ராசு - துளசி!

    இந்நிலையில் டிடியும் ஷாரூக்கான் உடன் நயன் - விக்கி திருமணத்தில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த ஃபோட்டோவை டிடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஃபோட்டோவுடன் சூப்பரான கேப்ஷனையும் டிடி பதிவிட்டுள்ளார். ஷாரூக்கானை கட்டி பிடித்து தனது அன்பை டிடி வெளிப்படுத்தி இருக்கிறார்.




    அந்த பதிவில் டிடி கூறியிருப்பதாவது, “ நான் அவரை கட்டிப்பிடித்து, சொல்ல விரும்பிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன், இத்தனை வருடங்கள், இவ்வளவு நினைவுகள் ,இத்தனை சந்தோஷங்களை நீங்கள் எங்களுக்கு தந்துள்ளீர்கள். உங்களின் மகிழ்ச்சிக்காக தினமும் நான் பிரார்த்தனை செய்வேன் சார். எங்கள் கிங் கான் இந்தத் துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்த நாளில் இப்படியொரு புகைப்படத்தை பதிவு செய்கிறேன் .உங்களைப் போல் இதற்கு முன்பும் , இதற்கு பின்பு யாரும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Director vignesh shivan, Nayanthara, Shah rukh khan, Vijay tv

    அடுத்த செய்தி