விஜய் டிவி ஆங்கர் டிடிக்கு எப்படி அறிமுகம் தேவையில்லையோ அதே போல தான் அவரின் அக்கா பிரியதர்ஷினி பற்றியும் சின்னத்திரை வெள்ளித்திரையில் அறிமுகமே தேவைபடாது. சிறுவயதில் இருந்தே பன்முகத் திறமை கொண்டவராக இருந்து வரும் பிரியதர்ஷினி சிறந்த ஆங்கராக வலம் வந்தவர். தமிழ் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து நடிப்பு மற்றும் டான்ஸிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருதும் வாங்கி இருக்கிறார்.
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா..! தமிழ் சினிமாவின் கலாய் மன்னன் கவுண்டமணியும் கவுன்டர்களும்
நடனத்தில் ஆர்வம் மிகுந்த பிரியதர்ஷினி சுமார் 15 வருடங்கள் குரு மதுரை ஆர்.முரளிதரன் மற்றும் மணிமேகலை ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்று கொண்டவர் ஆவார். இது மட்டுமின்றி குரு கல்யாணியிடம் குச்சிப்புடி நடனத்தையும், குரு ஜிக்யாசா கிரி என்பவரிடம் கதகளியையும் கற்று கொண்டார்.தன்னுடைய திறமையால்,
சன் டிவி, விஜய் டிவி போன்ற முன்னணி டிவி சேனல்களில் முக்கிய ஆங்கர் மற்றும் சீரியல் நடிகையாக விளங்கி ஒரு ரவுண்டு வந்தார்.
இதையும் படிங்க.. முத்தழகுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பூமி செய்த துரோகம்!
தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகர் குடும்பத்தின் 2வது மருமகளாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரின் நேர்த்தியான் நடிப்பு கைத்தட்டல்களை வாங்கி கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை தான் கற்றுக் கொண்ட நடனத்தை மற்றவர்களும் சொல்லிக்கொடுக்கிறார். முறையாக பரதநாட்டிய கிளாஸ் எடுத்து வருகிறார். ஃபேமலி, கெரியர், பர்சனல் லைஃப் என பிஸியாக இருக்கும் பிரியதர்ஷினி சோஷியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவ்.
அவ்வப்போது புகைப்படங்களை,
ரீல்ஸ்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பரதநாட்டியம் வகுப்புக்காக கடலுக்கு அருகில் இருக்கும் பாறைக்குள் மேல் வீடியோ மற்றும் ஃபோட்டோ ஷூட் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை கடல் அலைகள் இழுத்து சசெல்கின்றனர். உடனே பேலன்ஸ் செய்து அவர் எழுந்து விடுகிறார். இந்த வீடியோவை ’ஷூட்டிங் பரிதாபங்கள்’ என கேப்ஷனுடன் பிரியா ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இனிமேல் இதுப்போன்று ரிஸ்க் எடுக்க வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளனர்.
அது சரி, அக்காவின் வீடியோவை பார்த்து டிடி என்ன அட்வைஸ் செய்தார் என்று தெரியவில்லையே?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.