Biggboss 4 Tamil | 'ரியோவிற்கு அடிப்படை மரியாதை கூட தெரியவில்லை' - டான்சர் சதீஷ் விமர்சனம்..

சதீஷ் மற்றும் ரியோ

பிக்பாஸ் ரியோவிற்கு அடிப்படை மரியாதை கூட தெரியவில்லை என்று டான்சர் சதிஷ் விமர்சித்துள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தொடங்கி 46 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், வேல்முருகன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் இதுவரை ரேகா, சுரேஷ், வேல்முருகன் வெளியேறியுள்ள நிலையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா, சுஜித்ரா ஆகியோர் வருகை தந்துள்ளனர். 

தற்போது 15 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சியானது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. அதில் 7 பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் விமர்சனத்துக்குள்ளாவது வழக்கம். அந்த வகையில் நடன இயக்குநர் சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சில் குறித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். 

கோலிவுட்டில் பிரபல டான்சரான சதீஷ், அச்சம் என்பது மடமையடா, சிலம்பரசன் டி.ஆர் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுக்கும் நடமாடியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் சதிஷ் போட்டியாளர்கள் நடத்தை குறித்து தனது கருத்தை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் ரியோ தனது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனடியாக கோபப்படுவதாக கூறியுள்ளார்.

Also read... நான் தனி மரமாக நிற்கிறேன் - எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெற்றபோது ஆரி, பாலாஜியை "காதல் கண்ணை மறைப்பதாக கூறினார்", இது மிகப்பெரிய விவாதமாக மாறியது. இதில் சம்மந்தமே இல்லாமல் ரியோ, பாலாஜியிடன் சண்டை போட்டது விமர்சனத்திற்குள்ளானது. இதுகுறித்த சதீஷ் அவரது பதிவில், ரியோ ஏன் இவ்வளவு ஹைப்பராக இருக்கிறார். 

சொன்ன ஆரி சுமா இருக்கிறார், ரியோ அர்ச்சனாவிடம் இருந்து விலக வேண்டும். ரியோ, பாலாவிடம் நீங்கா சொல்லவில்லை என்றால் மன்னித்து விடுங்கள், ஆனா நீங்கள் சொன்னிங்க என கூறினார். அதேபோல சிவானி,  பாலாவிடம் கையில் ரத்தம் வருகிறது, நீங்க பீல் பன்ணுன்னு நான் சொல்லவில்லை என்கிறார். விட்டா நம்மை மெண்டல் ஆக்கிருவாங்க போல என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் "பாலா அருகில் தான் ரியோ இருந்தார், அவர் என்ன கூறினார் என்பது தெளிவாக கேட்டிருக்கும்.  ஒளிபரப்பின் போது என்னால் கேட்க முடியவில்லை. பாலா கூறாத ஒன்றை குடும்பத்தினர் கேட்டால் என்ன நினைப்பார்கள் என ரியோ கத்துகிறார். என்ன கொடுமை இது? தேவையற்ற கோபம் http://scene.so, எல்லாரும் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தினர் பார்க்கின்றனர். என்னா பா இது என்று பதிவிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து மற்றொரு டிவீட்டில் , ரியோவிற்கு அடிப்படை மரியாதை கூட இல்லை, அனிதா ஐந்து நிமிடம் பேச வேண்டும் என ரியோவிடம் கேட்டார். சாரி நான் உன்னுடன் பேச விரும்பவில்லை என முகத்திற்கு நேராக கூறி இருக்கலாம், ஆனால் அவரது டீமுடன் அமர்ந்து அவரை கேலி செய்வது சரியல்ல. நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதற்காக அவர் சமையலறை அணியில் உதவுவது வேடிக்கையானது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ரியோ சிவானியையும் விமர்சித்துள்ளார். அர்ச்சனா, சுசித்ரா, சம்யுக்தா, நிஷா, அஜீத் உள்ளிட்டோருடன் பிக் பாஸ் சீசன் 4 ஒரு போரிங்கான நிகழ்ச்சியாக உள்ளது. மேலும் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி இருந்தால் ஆண் போட்டியாளராக இருக்க விரும்பதுவதாக சதிஷ் கூறியுள்ளார். சதீஷின் இந்த டிவீட்டிற்கு ஏரளாமானோர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ரியோ ஓவர் ரியாக்ட் செய்வதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். 
Published by:Vinothini Aandisamy
First published: