நந்தா - சாந்தினி ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்.. என்ன விஷயம் தெரியுமா?

நந்தா -சாந்தினி

சாந்தினி தமிழரசன் - நந்தா தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

 • Share this:
  நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

  இந்நிலையில் பிரபல தமிழ் நட்சத்திர ஜோடியான சாந்தினி தமிழரசன் - நந்தா, தங்களது புதிய வீட்டிற்கு நேற்றைய நல்ல நாளில் புதுமனை புகுவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளனர். நடிகை சாந்தினியும் நந்தாவும் தங்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் தங்களது புத்தம் புதிய வீட்டில் பால் காய்ச்சி புது வீட்டுக்கு குடிபெயரும் நிகழ்வை விமரிசையாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த சந்தோஷமான நிகழ்வில் சாந்தினி தமிழரசன் - நந்தா ஜோதியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி சில தொழில்துறை நண்பர்களும் பங்கேற்று புதுவீட்டிற்கு செல்லும் தம்பதியரை வாழ்த்தினர்

  இதனிடையே பிரபல சீரியல் நடிகர் அம்ருத், சாந்தினி தமிழரசன் - நந்தா தம்பதியின் புதுமனை புகு விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நடிகர் அம்ருத் தனது இன்ஸ்டாவில் சாந்தினி - நந்தாவுடன் இணைந்து எடுத்து கொண்ட செல்ஃபியை ஷேர் செய்து வாழ்த்து செய்தியும் பதிவிட்டுள்ளார். "கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.. உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் புதிய வீட்டிற்காக வாழ்த்துக்கள்" என்று நடிகர் நடிகர் அம்ருத் தெரிவித்து உள்ளார். இந்த வாழ்த்து செய்திக்கு நடிகை சாந்தினி தமிழரசன் நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் கமெண்ட் செய்து இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே நடிகை சாந்தினி தனது நெருங்கிய தோழியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து “நண்பர்கள் குடும்பத்தை போன்றவர்கள்" இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தார். புதிய வீட்டிற்கு சிறப்பாக விழா நடத்தி முடித்துள்ள சாந்தினி தமிழரசன் - நந்தா தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் டைரக்டர் பாக்யராஜின் சித்து+2 படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இரட்டை ரோஜா சீரியலில் அபிராமி மற்றும் அனுராதா என்று டபுள் ஆக்ஷன் ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது கணவர் நந்தா பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆவார்.
  வெள்ளித்திரை மற்றும் நிறைய டிவி ரியாலிட்டி ஷோக்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய இவர் தற்போது ஜீ தமிழின் கோகுலத்து சீதை சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா டான்ஸ் ஷோவில் பங்கேற்று ரன்னர்-அப் ஆனார் நந்தா. மேலும் இவர் பல டான்ஸ் ஸ்டுடியோக்களை நடத்தும் தொழிலதிபரும் ஆவார். கணவன், மனைவி இருவருமே ஜீ தமிழ் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி இருக்கிறார்கள்.  நந்தா மற்றும் சாந்தினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: