முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Dance Vs Dance சீசன் 2 - குஷ்பு, பிருந்தாவுடன் இணையும் பிரபல தமிழ் நகைச்சுவை பேச்சாளர்!

Dance Vs Dance சீசன் 2 - குஷ்பு, பிருந்தாவுடன் இணையும் பிரபல தமிழ் நகைச்சுவை பேச்சாளர்!

Dance Vs Dance சீசன் 2

Dance Vs Dance சீசன் 2

பேராசிரியர், பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் உள்ளிட்ட பல முகங்களை கொண்டவர் மதுரையைச் சேர்ந்த ஞானசம்பந்தன்

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்க பிரபல முன்னணி தமிழ் சேனல்கள் போட்டி போட்டு கொண்டு பல கண்கவர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல்களுக்கு அடுத்து மிகவும் பிடித்திருப்பது ரியாலிட்டி ஷோக்கள் தான். எனவே ரியாலிட்டி டான்ஸ் ஷோ, ரியாலிட்டி சாங் ஷோ என்று வரிசைகட்டி முன்னணி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் டான்ஸ் ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நடனத்தின் மீது ஆர்வம் இருக்கும் பெரியவர்களை தவிர குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் டான்ஸ் ஷோக்களை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். பிரபல முன்னணி தமிழ் சேனலாக இருந்து வரும் கலர்ஸ் தமிழிலும் மக்களை கவரும் வகையில் டான்ஸ் ரியாலிட்டி ஷோ இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் ரியாலிட்டி ஷோவால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலானது. டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ்களாக பிரபல நடிகை குஷ்பு சுந்தர், நடன இயக்குநர் பிருந்தா ஆகியோர் பங்கேற்க உள்ளது நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது குறித்து உற்சாகம் தெரிவித்திருந்த குஷ்பு, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா என்னுடன் இதில் பங்கேற்க போவது கேக் மீது செர்ரி பழத்தை வைத்தது போல உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். நடிகை குஷ்பு ஏற்கனவே அழகிய தமிழ் மகன், ஜோடி நம்பர் ஒன்-சீசன் 5 மற்றும் மானாட மயிலாட உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக இருந்துள்ளார். ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 குறித்த மற்றொரு புதிய ப்ரமோ விடியோவை கலர்ஸ் தமிழ் வெளியிட்டுள்ளது. இதில் குஷ்பு மற்றும் பிருந்தாவுடன் மற்றொரு பிரபலம் இணைந்துள்ளார்.

அவர் தான் நடிகரும், பேச்சாளருமான டாக்டர் ஜி.ஞானசம்பந்தன் (குருநாதன் ஞானசம்பந்தன்). இது குறித்த வீடியோவில் தோன்றும் குஷ்பு மற்றும் பிருந்தா இருவரும் டான்ஸ் மட்டுமே பார்த்து வந்த இந்த மேடையில் அழகான தமிழும் ஒலிக்க போகிறது என்று இன்ட்ரோ கொடுக்கின்றனர். தொடர்ந்து வீடியோவில் தோன்றும் பேச்சாளர், நான்தான் உங்கள் ஞானசம்பந்தம். உனக்கும் இந்த ஷோவிற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்.! அதன் ஷோ ஒளிபரப்பாகும் போது பாக்க போறீங்களே என்று கூறி விடைபெறுகிறார்.

Also read... விஜய் டிவி சீரியல் பிரபலமான கம்பம் மீனா வீட்டில் நடந்த விசேஷம்... ரசிகர்கள் வாழ்த்து!

பேராசிரியர், பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் உள்ளிட்ட பல முகங்களை கொண்டவர் மதுரையைச் சேர்ந்த ஞானசம்பந்தன். 2004-ல் கமல்ஹாசனின் விருமாண்டி படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். கலைமாமணி விருதை பெற்றவர். அவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.டான்ஸ் ஷோவில் தமிழ் பேச்சாளரை இணைத்திருப்பதன் மூலம் ஏதோ புதுமையை காட்ட போகும் கலர்ஸ் தமிழின் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2-க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

First published:

Tags: Kushbu