குக் வித் கோமாளி பிரபலம் புகழ், கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்து, அவரது வீட்டில் கறி விருந்தும் சாப்பிட்டிருக்கிறார்.
நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.
பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படத்திலும் அவர் நடித்திருந்தார். தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சியான புகைப்படம்!
சமீபத்தில் தனது காதலியையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் புகழ். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஊர் சுற்றுவது புகழுக்கு மிகவும் பிடித்த விஷயமாம். அந்த வகையில் தற்போது கிரிக்கெட் பிரபலம் நடராஜனை சந்தித்துள்ளார். சேலத்தில் உள்ள நடராஜன் வீட்டில் புகழுக்கு கறி விருந்தும் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்களை நடராஜன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?
"அண்ணன் புகழ் உடன் இருக்கும் போது மந்தமான தருணமே இருக்காது! எனது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்ததற்கு நன்றி” என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடராஜன்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.