இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் தான் செலவழித்த ஒருநாளின் ப்ரோமோ வீடியோவை யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்.
நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்தில் கலந்துக் கொண்ட அவர், தற்போது ஒளிபரப்பாகி வரும் அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்திலும் பங்கு பெற்றுள்ளார்.
இதற்கிடையே விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். அஜித்துடன் அவர் இணைந்து நடித்த வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார் புகழ். அதோடு மிஸ்டர் ஸூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்கியிருக்கிறார்.
நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?
இதற்கிடையே பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்ததை ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் புகழ். இந்நிலையில் தற்போது அவரது பரட்டை புகழ் யூ-ட்யூப் சேனலில் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ரொம்ப நாளாவே நம்ம நட்ராஜ், உங்கள பாக்கணும் அண்ணா, கண்டிப்பா பாக்கணும்ன்னு கேட்டுட்டே இருந்தாரு. இன்னைக்கு அவர் வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்’ என்கிறார். அடுத்து பேசும் நட்ராஜ், எங்கப்பா தங்கராசு, அம்மா சாந்தா, எனக்கு 3 தங்கச்சி, 1 தம்பி. எனக்கு நிறைய தடைகள் வந்தது. இங்க இருந்து போறதுக்கு பஸ் கிடையாது. போட்டுக்க நல்ல துணி இருக்காது. முக்கியமா பாத்ரூம் இருக்காது’ என்கிறார்.
ஹீரோவான குக் வித் கோமாளி புகழ்... வாழ்த்துகளை குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக்!
தான் சர்வதேச அளவில் விளையாடினாலும், உள்ளூரில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக சொந்த முயற்சியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றையும் தயார் செய்து வருகிறார் நட்ராஜ். இதன் முழு வீடியோவை காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricketer natarajan, Vijay tv, Youtube