Home /News /entertainment /

பணத்துக்காக வரல, உங்க மனசுக்காக தான் வந்தேன்! குக் வித் கோமாளியில் உருகிய புகழ்!

பணத்துக்காக வரல, உங்க மனசுக்காக தான் வந்தேன்! குக் வித் கோமாளியில் உருகிய புகழ்!

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

இந்த வாரம் குக் வித் கோமாளியில் புகழின் என்ட்ரி ஹாப்பி தான் என்றாலும், இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள்

    என்னப்பா புகழ் இந்த பக்கம்? என யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த டயலாக்கை போட்டு இருக்கிறார் புகழ் என்கின்றனர் ரசிகர்கள்..

    முன்பெல்லாம் சின்னத்திரை வேறு, வெள்ளித்திரை வேறு என்று பிரித்து பார்த்து கொண்டிருந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலைமையே மாறி விட்டது. சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் சிறப்பான இடத்தை பிடித்தவர்களும் இருக்கிறார்கள். அதே போல வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த பலர், தற்போது  சின்னதிரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆன புகழ், வெள்ளித்திரை நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

    இதையும் படிங்க.. சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்

    வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமில்லை ஹீரோவாகவும் மாறிவிட்டார். அவரின் நடிப்பில் 2 படங்கள் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளன. அந்த படத்திற்கான ஷூட்டிங்கில் தான் புகழ் பிஸியாக இருக்கிறார். இதனால் அவரால் தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 3ல் பங்கேற்ற முடியவில்லை.அதை புகழே முதல் எபிசோடில் கூறிவிட்டார். இருப்பினும் தனது ரசிகர்களுக்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம், புகழ் குக் வித் கோமாளியில் தலையை காட்டி வருகிறார்.

    இதையும் படிங்க.. ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?

    இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி ஷோவுக்கு புகழ் வருகிறார். அப்போது டீஜே பிளாக்,  அவருக்கு காசு மேல் காசு வந்து என்ற பாடலை ஒலிக்கிறார். அதற்கு செஃப் தாமு வழக்கம் போல் கலாய்கிறார். அதற்கு புகழ் “நான் பணத்துக்காக வரல உங்க மனசுக்காக தான் வந்தேன்” என பன்ச்சை போடுகிறார். கடைசியில்  செஃப், கோமாளிகள், போட்டியாளர் சேர்ந்து புகழை கும்மி எடுக்கின்றனர்.



    இந்த புரமோ விஜய் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வாரம் குக் வித் கோமாளியில் புகழின் என்ட்ரி ஹாப்பி தான் என்றாலும், இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் இல்லாத குறையை பாலாவும், குரேஷியும் தீர்த்து வைக்கிறார்கள். நீங்கள் அதே காமெடியை இன்னும் செய்கிறீர்கள் எனவும் கமெண்ட் செய்துள்ளனர். ஆனாலும் புகழ் வந்ததில் செஃப் தாமு, வெங்கடேஷ் பட், அவரின் தீவிர ரசிகர்கள், போட்டியாளர்கள் பயங்கர ஹாப்பி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி