விஜய் டிவி சிவாங்கி பற்றிய அறிமுகம் சின்னத்திரை ரசிகர்களுக்கும் சரி, சோஷியல் மீடியா யூசர்களுக்கும் சரி தேவைப்படாது. கடந்த 2019-ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி ஆன சிவாங்கி, அதற்கு முன்பே திரைப்பட பாடகி. 2009-ஆம் ஆண்டு 'பசங்க' திரைப்படத்தில் ஒரு பாடலை சிவாங்கி பாடியுள்ளார். இந்த தகவல் எத்தனை பேருக்கு தெரியும்? அதுமட்டுமில்லை அவரின் அப்பா, அம்மா இருவரும் பின்னணி பாடகர்கள் தான். இசை குடும்ப வாரிசான சிவாங்கி இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே பரிச்சயமானவர்.
2020-ஆம் ஆண்டில் காமெடி-குக்கிங் ஷோவான குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்ட பின்பு வேற லெவலுக்கு சென்றார் சிவாங்கி. அதற்கு முன்பு சிவாங்கி பேச்சை கலாய்த்தவர்கள் எல்லோரும் அந்த ஷோவுக்கு பின்பு சிவாங்கியின் ரசிகர்கள் ஆகினர்.
தற்போது டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதோடு சினிமாவில் நடிப்பது, பாடுவது, ஆல்பம் பாடல்களை பாடுவது என படு பிஸியாக வலம் வருகிறார் சிவாங்கி. தற்சமயம் விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் குக் வித் கோமாளி சீசன் 3ல் கலக்கி கொண்டே, சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்திலும் சிவாங்கி நடித்து முடித்தார்.
இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?
அந்த படத்தில் இடம்பெறும் க்ரஷ் என்ற டயலாக் தான் இப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ட்ரெண்ட். அதுமட்டுமில்லை சிவாங்கி, எந்த அளவிற்கு பிரபலமானார் என்றால்? இந்தியா க்ளிட்ஸ் வலைத்தளத்தால் "2020 ஆம் ஆண்டில், தொலைக்காட்சியில் மிகவும் விரும்பத்தக்க பெண்" என்று பட்டியலிடப்படும் அளவிற்கு பிரபலமடைந்தார். சிவாங்கியின் அப்பாவித்தனமும், வெகுளித்தனமும் தான் ரசிகர்களை அட்ராக் செய்ய வைத்துள்ளது.
இதையும் படிங்க.. தமிழ் சினிமாவின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!
இந்நிலையில் நேற்றைய தினம், சிவாங்கி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். செல்ல மகளின் பிறந்த நாளை சிவாங்கியின் பெற்றோர் கேக் வெட்டி அதகளப்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை இன்ஸ்டாவில் இருக்கும் சிவாங்கின் பெஸ்ட் ஃபோட்டோக்களை பிரேம் செய்து சுவற்றில் தொடங்கவிட்டு சர்ப்பிரைஸூம் கொடுத்து இருக்கிறார்கள். பச்சை கலர் பாவடை தாவணியில் தேவதை போல் ஜொலிக்கிறார் சிவாங்கி. இந்த புகைப்படங்களையும் சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். ரசிகர்கள் சிவாங்கிக்கு தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.