தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் போட்டியாளர்களில் பலர் மக்களின் அபிமானம் பெற்ற பிரபலங்களாக மாறி விடுகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் முக்கியமான மற்றும் முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது ஸ்டார் விஜய் டிவி. எண்ணற்ற சீரியல்கள் மற்றும் கலகலப்பான பால் ரியாலிட்டி ஷோக்களின் அணிவகுப்பு மூலம் தமிழக மக்களின் பேராதரவு பெற்றுள்ளது விஜய் டிவி. எனவே இந்த சேனலின் சீரியல்கள் அல்லது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பவர்களில் பல மக்களிடையே எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள்.
அப்படி மக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் சிவாங்கி. சின்னத்திரையில் முதல் முதலாக சூப்பர் சிங்கர் 7-ல் பங்கேற்ற சிவாங்கி, தனது அசத்தலான குரல் வளம் காரணமாக ரசிகர்களை மயங்கினார். பேசும் போது குரல் வித்தியாசமாக இருந்தாலும், பாடும் போது நம்மை உருக்கி விடுவார் சிவாங்கி. அதுமட்டுமில்லாமல் வெகுளித்தனமான பேச்சாலும் ரசிக்க வைத்தார்.
இதனை தொடர்ந்து தான் வித்தியாசமான கான்செப்ட்டில் ஒளிபரப்பாகி மெகாஹிட் அடித்த குக் வித் கோமாளியில் பங்கேற்றார் சிவாங்கி. கேரளாவின் தொடுபுழாவில் மே 25, 2000-ஆம் ஆண்டில் பிறந்த சிவாங்கியின் தாய் மொழி மலையாளம். இவர் தந்தை கிருஷ்ணகுமார் இசைக் கலைஞர், தாய் பின்னி கிருஷ்ணகுமார் பின்னணிப் பாடகி. தவிர சிவாங்கியின் பெற்றோர் இருவருமே கலைமாமணி விருது பெற்றவர்கள் ஆவர்.
வெகுளித்தனமான பேச்சு மற்றும் அற்புத குரல் வளத்தோடு சேர்த்து காமெடியிலும் கலக்கி விஜய் டிவி ரசிகர்கள் மட்டுமின்றி பல சேனல்களின் ரசிகர்கள் மத்தியிலும் வெகு பிரபலமானார் சிவாங்கி. இதனிடையே ஆல்பம் மற்றும் படங்களிலும் பாடியிருந்தார். விஜய் டிவி-யின் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக களமிறங்கினார். மக்கள் மத்தியில் கிடைத்துள்ள பெயர் மற்று புகழ் காரணமாக வெள்ளித்திரையிலும் விரைவில் அறிமுக ஆக உள்ளார். இதனிடையே நேரம் கிடைக்கும் போது கச்சேரிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சிவாங்கி.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்டை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பெங்களூரில் முரளியின் மெளனராகம் என்ற மியூசிக் ட்ரூப்பின் இசை கச்சேரியில், தான் பாட உள்ள தகவலை தெரிவித்து உள்ளார் சிவாங்கி. மேலும் இந்த இன்னிசை கச்சேரியில் பிரபல மற்றும் மூத்த பின்னணி பாடகர் மனோவுடன் தான் இணைந்தது பாட உள்ள தகவலையும் சிவாங்கி தெரிவித்து உள்ளார். இது தொடர்பான போஸ்ட்டரை ஷேர் செய்துள்ள சிவாங்கிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.