ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவாங்கி, மணிமேகலை சேர்ந்து நடுரோட்டில் என்னெல்லாம் செய்றாங்க பாருங்க.. வைரல் வீடியோ..

சிவாங்கி, மணிமேகலை சேர்ந்து நடுரோட்டில் என்னெல்லாம் செய்றாங்க பாருங்க.. வைரல் வீடியோ..

சிவாங்கி, மணிமேகலை

சிவாங்கி, மணிமேகலை

Sivaangi Manimegalai : வைரலாகும் சிவாங்கி, மணிமேகலையின் ஃபுட் விலாக் வீடியோ..

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்த பிறகு பல நடிகர் மற்றும் நடிகைகள் மிகவும் பிரபலமாகி விடுவதுண்டு. அவர்களின் திறமை ஒருபுறம் இருக்க, மறுபுறம் விஜய் டிவியின் புகழ் மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.இந்த அளவு விஜய் டிவி பிரபலங்கள் புகழ் பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நேயர்களாகிய மக்கள் தான். ஆம், மக்களின் ஆதரவினால் தான் இவர்கள் இந்த அளவிற்கு புகழடைந்து உள்ளனர். அதே போன்று இவர்களில் பலருக்கு சமூக வலைத்தளங்களிலும் தனி அக்கவுண்ட் உள்ளது. எனவே அதிலும் ஏராளமானோர் விஜய் டிவி பிரபலங்களை ஃபாலோ செய்து வருகின்றனர்.

இதற்கேற்ப பலரும் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற முக்கிய சமூக தளங்களில் நிறைய வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். விஜய் டிவியின் சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் பல வித இன்ஸ்ட்டா ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதே போன்று ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் பிரபலங்கள் தங்களது யூடியூப் சேனல்களில் வீடியோக்களை பதிவிட்டு பல லட்சம் வியூஸ்களை அள்ளி விடுகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலமான மணிமேகலை தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை வைத்துள்ளார். இதற்கு பல லட்சம் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

also read : விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பற்றிய தெரியாத தகவல்கள்..

இவரின் யூடியூப் சேனலின் பெயர் 'ஹுசைன் மணிமேகலை' என்பதாகும். அதாவது மணிமேகலையும் அவரது கணவரும் சேர்ந்து இந்த சேனலை பார்த்து கொள்கின்றனர். குறைந்தபட்சம் வாரம் ஒரு வீடியோவாவது இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த வீடியோக்களில் மணிமேகலையும் அவரது கணவரும் பல விஷயங்களை வேடிக்கையான முறையில் பகிர்ந்து கொள்வார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போன்றே இதிலும் பல காமெடி சீன்கள் இடம்பெறும். அதே போன்று இவரின் வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆவதும் வழக்கமான ஒன்று.
 
View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)also read : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இவர் தற்போது குக் வித் கோமாளி சிவாங்கியுடன் இணைந்து ஃபுட் விலாக் வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதில் சிவாங்கியும் மணிமேகலையும் செய்யும் லூட்டிகளை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம். பெங்களூருக்கு சென்று அங்குள்ள தெருக்களில் விற்கப்படும் பிரபல கடைகளின் உணவுகளை ருசி பார்த்து அதை வேடிக்கையான முறையில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை மணிமேகலையின் கணவரான ஹுசைன் தான் ஷூட் செய்துள்ளார். இதில் அவர்கள் பானி பூரி சாப்பிடும் பகுதியில் பல சிரிப்பு வெடிகளை போட்டுள்ளனர்.

' isDesktop="true" id="719475" youtubeid="y8TE46EYfHA" category="television">

இது போன்று பல வித உணவுகளை இந்த வீடியோவில் ருசி பார்த்துள்ளனர். மேலும், இவர்களின் ரசிகர்கள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டு மணிமேகலை மற்றும் சிவாங்கியுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டனர். இதுவரை இந்த வீடியோவை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பலர் தங்களது கருத்துக்களை கமெண்ட்ஸ் மூலம் இந்த வீடியோவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Vijay tv, Viral Video