குக் வித் கோமாளியில் இந்த வார எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சர்ப்பிரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது.
சின்னத்திரையில் ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக பார்க்கப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது சனி மற்றும் ஞாயிறு இரவு ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் தொடங்கியது முதலே அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி கொண்டது. வெங்கடேஷ் பட் பரத்தை அடித்தது, சூப்பர் சிங்கர் பரத் நடிக்கிறார் என்ற கமெண்ட், சமீபத்தில் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியை பார்த்து ட்ரெஸ் குறைந்து ஒருவருக்கு குழந்தை பிறந்தது என பதிவு செய்தது என அனைத்து கருத்துக்களும் இணையத்தில் ட்ரோலுக்கு உள்ளாகின. ஆனாலும் ஒரு கூட்டம் இந்த நிகழ்ச்சியை ஒருவாரம் கூட மிஸ் செய்யாமல் பார்த்துக் கொண்டு தான் வருகின்றனர்.
கேக் வெட்டி கொண்டாடிய காற்றுக்கென்ன வேலி சூர்யா - வெண்ணிலா! எதற்காக தெரியுமா?
இந்த சீசனில் யார் ஜெயிப்பார்? என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு தொடங்கி விட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் வைல்டு கார்டு ரவுண்டுக்கு பின்னர் ஃபைனல்ஸ் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில், இந்த வாரத்திற்கான குக் வித் கோமாளி புரமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபேமலி ரவுண்டில் போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தாரை குக் வித் கோமாளி செட்டுக்கு அழைத்து வருகிறார்கள்.
மிகப் பெரிய வெற்றி.. சந்தோஷத்தில் சன் டிவி எதிர் நீச்சல் சீரியல் குழு!
இந்த வாரம் அவர்களுடன் தான் சமைக்க போகிறார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 3ல் அர்ஜூன் அம்மா என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஸ்ருதிகா தனது கணவர் அர்ஜூனை அழைத்து வருகிறார். இந்த சீசனுக்கு போட்டியாளராக கலந்து கொள்ளாமலே ஃபேம்ஸ் ஆனது அர்ஜூன் தான். ஒவ்வொரு வாரமும் இவரின் பெயர் குறைந்தது 10 முறையாவது ஒலிக்கும். ஸ்ருதிகாவை அர்ஜூன் எப்படி தான் சமாளிக்கிறார் ? என கேட்காத ரசிகர்களே இல்லை.
இந்நிலையில் தனது காதல் மனைவிக்காக இந்த வாரம் அர்ஜூன் என்ட்ரி கொடுக்கிறார்,. அர்ஜூன் மட்டுமில்லை வித்யுலேகாவும் தனது கணவரை அழைத்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.