Home /News /entertainment /

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

குக் வித் கோமாளி சீசன் 3

குக் வித் கோமாளி சீசன் 3

குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய போட்டியாளர் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். 

குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய போட்டியாளர் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தொடங்கி டான்ஸ், பாட்டு, காமெடி, ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ என அனைத்திற்குமே தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால் இவர்கள் அனைவருமே ஒன்றாக என்ஜாய் செய்து பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’யாக தான் இருக்கும். சமையல் நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவை சேர்த்து வெளியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

குக்குகள் சமைக்க, கோமாளிகள் அதை கெடுக்க என நிகழ்ச்சி அரங்கம் முழுவதும் ஒரே அலப்பறையாக இருக்கும். குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டது. இரண்டு சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் வேற லெவலுக்கு ஹிட்டாக, தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சி பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் சீசன்-1 ஆனது 16 நவம்பர் 2019 அன்று தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் உமா ரியாஸ்கான், தாடி பாலாஜி, வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, ஞானசம்பந்தன் ஆகியோர் குக்குகளாகவும், சிவாங்கி , புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி, பப்பு ஆகியோர் கோமாளிகளாகவும் பங்கேற்றனர்.



 

முதல் பாகத்தை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இரண்டாம் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் அஸ்வின், பவித்ரா, கனி, மதுரை முத்து பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டனர். கோமாளியாக சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, சரத், பாலா ஆகியோர் பங்கேற்றனர். முதல் பாகத்தில் வனிதா விஜயகுமாரும், இரண்டாம் பாகத்தில் கனியும் வெற்றி பெற்றனர்.

also read : சேலம் டூ விஜய் டிவி... பாரதி கண்ணம்மா சீரியல் 'பாரதி’ கடந்து வந்த பாதை..

கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக அம்மு அமிராமி, அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், தர்ஷன், மனோபாலா, பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ராகுல் தாத்தா ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், ஷீத்தல் கிளாரின், சக்தி, பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.



வித்தியாசமான டாஸ்க், விறுவிறுப்பான சமையல் என செம்ம என்ஜாய் மெண்ட்டுடன் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. காமெடி, கலாய் என ஜாலியாக போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சிக்கு சட்டென பிரேக் போடுவது போல் எலிமினேஷன் அறிவிக்கப்படுவது உண்டு. இந்த வாரம் ரோஷ்னி, அம்மு அபிராமி, அந்தோணி தாசன் ஆகிய மூவரும் எலிமினேஷன் சுற்றில் பங்கேற்றனர். அவர்களுக்கு அவகடோவை வைத்து புதுமையான டிஷ் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

also read : ராஜா ராணி 2 சீரியலின் புதிய சந்தியா இவங்க தான்-போட்டோஸ்



இதில் அந்தோனிதாஸ் அவகடோ பாஸ்தா செய்தார். ரோஷ்னி அவகடோ அல்வா செய்ய, அம்மு அபிராமி பப்ஸ் போல அவகடோ ஸ்வீட் பாக்கெட்ஸ் செய்தார். இதில் அம்மு அபிராமி, ரோஷ்னியின் டிஷ் பாரட்டைப் பெற்றது. ஆனால் அந்தோணி தாசன் செய்த பாஸ்தாவில் குறைகள் இருந்ததாக நடுவர்கள் சுட்டிக்காட்டினர். அதனால் அந்தோணி தாசனை எலிமினேட் செய்வதாகவும் அறிவித்தனர். இதனையடுத்து மனோபாலா, ராகுல் தாத்தா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது அந்தோணி தாசன் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Vijay tv

அடுத்த செய்தி