Home /News /entertainment /

வித்தியாசமான லுக்கில் ரோஷினி! இப்படியும் புடவை கட்டலாமா?

வித்தியாசமான லுக்கில் ரோஷினி! இப்படியும் புடவை கட்டலாமா?

நடிகை ரோஷினி ஹரிபிரியன்

நடிகை ரோஷினி ஹரிபிரியன்

Roshni Haripriyan : பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து பிரபலமான ரோஷிணி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்று சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.

மாடலிங் தொழில் துறையில் இருந்து பலரும் சின்னத்திரை மற்றும் பெரிய திரைக்கு நடிகைகளாக சென்றுள்ளனர். டார்க் சாக்லேட் அழகி அல்லது டஸ்கி பியூட்டி என்று சொல்லப்படும் நடிகை ரோஷினியும் அவர்களில் ஒருவர். மாடலிங் உலகில் ஒரு சிலர் தான் மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும். அதிலும் ரோஷினி ஹரிப்ரியன் முன்னுதாரணமாக இருந்துள்ளார். மாடல்கள், நடிகைகளென்றால் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பை உடைத்த சிலரில் ரோஷினியை தவிர்க்கவே முடியாது.

தனது போட்டோ ஷூட்கள் மூலம் பிரபலமடைந்த ரோஷினிக்கு விஜய் டிவி யில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாரதி கண்ணம்மா சீரியல் ஹிட்டானதற்கு முக்கிய காரணங்களில் ரோஷினியும் ஒருவர். ஆரம்பத்தில் நடிக்கவே தெரியவில்லை, பாடி லாங்வேஜ் இல்லை என்று பல நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு ரோஷினி என்பதை மறந்து கண்ணம்மா என்று தவிர்க்கமுடியாத அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதே நேரத்தில் கதைகளத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்ததாலும், ஒரு சில வேடிக்கையான விஷயங்களை சீரியஸாக காட்டியதால் அதிகமான டிரோல் செய்யும் விஷயமாகவும் ஆக்கப்பட்டார்.

எப்படி இருந்தாலும் பாரதி கண்ணம்மா பல மாதங்களுக்கு டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடம் வகித்ததில் ரோஷினிக்கும் கணிசமான பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இடையில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்று சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். உண்மையாக சீரியலில் இருந்து விலகுவதற்கு முன்பு சில முறை அதை பற்றி கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஒருவேளை பொய்யாகத்தான் இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும் போது, உண்மையிலேயே சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக அவரை போலவே தோற்றமளிக்கும்வின் வினுஷா என்ற மாடல் தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

also read : சுந்தரி சீரியலில் களை கட்டப்போகும் திருவிழா.. கார்த்திக்கிற்கு பூஜை நடக்குமா?ரோஷினி சென்ற பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிதாக எடுபடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. திரைப்படங்களில் நடிப்பதற்காக தான் சீரியலை விட்டு விலகினார், இருப்பினும் சீரியலில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதற்கு சற்று காலதாமதம் ஆனதால் படங்களில் கிடைத்த வாய்ப்பும் கைநழுவிப் போனது.

also read : உனக்காகத்தான் இவ்வளவு நாள் வேண்டினேன்... கர்ப்பத்தை அறிவித்த நமீதா!

ஏதேனும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக குக்கு வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். அழகு பொம்மையாக ஒவ்வொரு வாரமும் அசத்தலான காஸ்ட்யூமில் வரும் ரோஷினிக்கு நிஜமாகவே சமைக்க தெரியுமா? என்பது இப்போது வரை கேள்வியாகத்தான் இருக்கிறது!ஏனென்றால் ஒரு வாரம் சூப்பராக சமைத்து பரிசுகளை வாங்குவார், அடுத்த வாரமே டேன்ஜர் சோனில் இருப்பார். திரைப்படங்களுக்கு வாய்ப்பு இல்லாததால்தான் குக் வித் கோமாளியில்  போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இதன்மூலம் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.மேலும், முன்புபோல பல்வேறு போட்டோ ஷூட்களில் மற்றும் மாடலாக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இவர் வித்தியாசமான முறையில் புடவை அணிந்து கொண்ட போட்டோ ஷூட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சொர்ணக்கா ரேஞ்சில் டெர்ரர் லுக்கில் இருக்கிறார் ரோஷினி.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actress, Vijay tv

அடுத்த செய்தி