விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் ஏதோ ஒரு வகையில் தங்களது வாழ்க்கையில் சிறந்த இடத்தை பிடித்து விடுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க கூடிய தனி சிறப்பம்சம் தான்.
விஜய் டிவியில் இணையும் போது சாதாரண நிலையில் இருந்தவர்கள் கூட இன்று மிகவும் பிரபலமாகி உள்ளனர். இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரிய ஆளாகி இருக்கின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்ஷனுக்கென்று தனி இடமும் உண்டு.
கோபியின் நிஜமுகத்தை தெரிந்து கொண்ட அந்த நபர்.. பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்!
இவர் முதன்முதலில் தனது தொலைக்காட்சி பயணத்தை கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொடங்கினார். பிறகு படிப்படியாக தனது திறமையை வளர்த்து கொண்டு இன்று முக்கிய பிரபலமாக உருவாகி உள்ளார். இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமல்லாமல், சில சினிமா படங்களிலும் நடித்தும் வருகிறார். மேலும் பல வாய்ப்புகளை பெறும் அளவிற்கு இவர் வளர்த்துள்ளார்.
விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின், இது வரை நடந்த 3 சீசன்களுக்கும் ரக்ஷன் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்த ஷோ காமெடியான நிகழ்ச்சியாகும். இதில் கோமாளிகளால் நடக்க கூடிய கலாட்டா, கேலி, கிண்டல் போன்றவை ஒரு பக்கம் இருக்க, தொகுப்பாளரான ரக்ஷன் செய்யும் காமெடிகளும் சிறப்பாக இருக்கும். இந்த ஷோவில் உள்ள எல்லோரையும் போன்றே ரக்ஷனையும் சேர்த்தே கோமாளிகள் கலாய்த்து வருவார்கள். அதே போன்று பதிலுக்கு ரக்ஷனும் அவர்களை கலாய்த்து விடுவார்.
இவர் இந்த ஷோவில் இருப்பதே வேஸ்ட் என்கிற அளவுக்கு மணிமேகலை உள்ளிட்ட பலரும் ரக்ஷனையும் சிறப்பாக கலாய்ப்பார்கள். அந்த அளவிற்கு ரக்ஷனை கலாய்த்தாலும், இதை எதையும் காதில் போட்டு கொள்ளாமல் பதிலுக்கு மற்றவர்களை கலாய்த்து விடுவார். ரக்ஷனின் வேடிக்கையான தொகுத்து வழங்கும் முறைக்காகவே இவருக்கு தனி ரசிகர்களும் உள்ளனர். பெரும்பாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் ரக்ஷனை அதிகம் பிடிக்கும். அதே போன்று இவருக்கென்று தனி இன்ஸ்டாகிராம் பக்கமும் உள்ளது. அதிலும் இவருக்கு அதிக ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
லோன் ஆப்ஸ் மூலம் கடன் வாங்க போறீங்களா? இதை கொஞ்சம் கவனிங்க!
இப்படி பல வகையில் தனது திறமைகளை வளர்த்து கொண்டு முன்னேறி வரும், ரக்ஷனுக்கு சமீபத்தில் விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது. சில காலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்தாலே பல லட்சங்களில் சம்பளம் கிடைக்கும். ஆனால், ரக்ஷனோ பல காலமாக விஜய் டிவியின் டாப் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கி வருகிறார். எனவே தற்போது ரக்ஷனின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. அதன்படி குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் ஒரு எபிசோடிற்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த அளவிற்கு சம்பளம் தருவார்களா? என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.