கன்னடம் , தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியாவைத் தாண்டி உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் "கந்தாரா" திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதற்காக தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, ' நம்பிக்கைக்குரிய நடிகருக்கான" விருதை வென்றார்
நாட்டில் புதைந்து கிடக்கும் கலைகளை திரைப்படங்களில் வெளிப்படுத்தி அதற்கு அங்கீகாரம் கொடுக்க முயல்கின்றனர். அதேபோல திரைப்படங்களில் இருக்கும் தனித்துவ காட்சிகளை சின்னத்திரையில் உள்ள கலைஞர்கள் நடித்து திரைப்படத்திற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர்.
View this post on Instagram
தற்போது அதிக மக்களின் பேவரேட் ஷோவாக இருந்து வரும் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் வாரந்தோறும் கோமாளிகள் எதாவது ஒரு திரைப்படக் கதாபாத்திரத்தை ஏற்று அவர்களை போலவே பாடி லாங்குவேஜ் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் நடிகர் புகழ், காந்தாரா படத்தில் வரும் பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர் போன்று வேடம் அணிந்து வந்தார்.
திரைப்படத்தில் எப்படி ரிஷப் ஷெட்டி மக்களை தனது நடிப்பால் உறையவைத்தாரோ அதே போன்ற ஒரு நடிப்பை புகழ் வெளிப்படுத்தினார். பஞ்சுருளி தெய்யம் நடிகர்கள் வேடத்தில் புகழ் நடித்த கட்சி சுமார் 2 நிமிடங்கள் ஒளிபரப்பானது. பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்காட்சியாக அது அமைந்தது.
இந்நிலையில் பஞ்சுருளி தெய்யம் நடிகர்கள் போல மேக்கப் போடும் வீடியோவை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில் அந்த உருவத்தை கொண்டுவர 4 மணி நேரம் ஆனது என்று கூறியதோடு தனக்கு மேக்கப் போட்ட நபருக்கும் பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து செய்தி போட்டிருந்தார்.
மேக்கப் வீடியோவை பகிரும்பியது, "இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது. மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் @rishabshettyofficial .
இதையும் படிங்க: குக் வித் கோமாளி 4: இந்த வாரம் வெளியேறப்போகும் குக் இவரா?
அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...❤️" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த மேக்கப் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகழ் இந்த கெட்டப் மட்டுமல்லாது இதற்கு முன்னரும் பல கெட்டப்புகள் போட்டு பாராட்டுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooku with Comali