குக் வித் கோமாளி 3 ஃபைனல்ஸ் முடிந்தாலும் இன்னும் அதுக் குறித்த பேச்சுக்கள் இணையத்தில் முடிந்த பாடில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் நோட் செய்து ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பாலாவின் பெரிய மனசுக்கு குக் வித் கோமாளி ஃபைனல்ஸில் நடந்த திருப்பம் குறித்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லை பாலாவுக்கு இந்த உதவியை செய்த புகழ் மற்றும் ஸ்ருதிக்காவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னி பெடலெடுக்கும் ஷோவாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 57 எபிசோடுகள் ஒளிப்பரப்பான இந்த 3வது சீசன் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்த சீசனில் அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பல கட்டங்களுக்கு பிறகு சென்ற ஃபைனல்ஸூக்கு மொத்தம் 6 பேர் தேர்வாகி இருந்தனர்.
அர்ஜூன் - ரோஜா சேர்வார்களா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
குக் வித் கோமாளி 3 இறுதி போட்டி 2 வாரத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதை டிவியி;ல் டெலிகாஸ்ட் செய்தனர். தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சி காமெடிக்கு பஞ்சமில்லாமல் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. வின்னர் அறிவித்த சமயத்தில் ஸ்ருதிக்கா கண்கலங்கி அழுதார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவமும் அரங்கேறியது.
வின்னருடன் சேர்ந்து சமைத்த கோமாளிக்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஸ்ருத்திகாவின் கோமாளி புகழ் ஒரு லட்சத்தை பெற்றுக் கொண்டார். முதல் சுற்றில் பாலா தான் அவரின் கோமாளி என்பதும் இதில் முக்கியம். இந்நிலையில் புகழ் தனக்கு வழங்கப்பட்ட 1 லட்சத்தை வாங்க மறுத்தார். அதுமட்டுமில்லை அந்த பணத்தை பாலா படிக்க வைக்கும் ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்காக தூக்கி கொடுத்தார். இதனால் அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. அடுத்த கொஞ்ச நேரத்தில் முதல் சுற்றில் ஸ்ருதிக்காவுக்கு கோமாளியாக இருந்த பாலாவுக்கும் 1 லட்சம் வழங்கப்பட்டது.
View this post on Instagram
கடைசியில் ஸ்ருதிக்காவும் அந்த குழந்தைகளின் படிப்புக்காக 1 லட்சம் வழங்குவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தார். பாலா சென்னையில் இருக்கும் பிரபல ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.