Home /News /entertainment /

சொன்னா நம்ப மாட்டீங்க.. குக் வித் கோமாளி குரேஷிக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு!

சொன்னா நம்ப மாட்டீங்க.. குக் வித் கோமாளி குரேஷிக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு!

குக் வித் கோமாளி குரேஷி

குக் வித் கோமாளி குரேஷி

குரேஷிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என ஆச்சரியத்து  கேட்கின்றனர்.

    விஜய் டிவி குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய குரேஷிக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் குரேஷி சின்னத்திரை வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். தற்போது ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 3ல் புகழ் இல்லாத இடத்தை சூப்பராக ஃபில் செய்கிறார் குரேஷி. இவரின் டைமிங், ரைமிங் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. அதுவும் இவருக்கும் ஸ்ருதிக்காவுக்கும் பயங்கர கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆக டைம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ருதிக்காவை  கலாய்த்து தள்ளுகிறார் குரேஷி. திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று விஜய் டிவியின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் குரேஷி பேச்சிலர் என்று தான் பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

    Nayanthara Vignesh Shivan: இணையத்தில் லீக்கான நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்!

    ஆனால் அதுதான் இல்லை. இவருக்கு திருமணம் ஆகி 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறார். குரேஷியின் மகள் பெயர் அயிரா.
    அயிராவின் முதல் வருட பிறந்த நாளை குரேஷி போன வருடம் பயங்கர கிராண்டாக கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக இணையத்தில் படு வைரலாக ஷேர் ஆகி வருகிறது. இது பழைய வீடியோ என்றாலும் இப்போது தான் நெட்டிசன்கள் கண்ணில் பட்டு இருக்கிறது. இந்த வீடியோவை குரேஷி தன்னுடைய யூடியூப் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Rina Riz Parveen (@riz_parveen)






    அதுமட்டுமில்லை குரேஷி வீட்டு விசேஷத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள், சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்கள் அணிவகுத்து சென்று இருக்கிறார்கள். அந்த வீடியோவில் பிக் பாஸ் ரியோ தொடங்கி, சரத், பாலா, புகழ், சிவாங்கி என விஜய் டிவி ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் சேர்ந்து குழந்தைக்கு வாழ்த்துக்கள் கூறும் தருணங்களும்  இடம்பெற்று இருக்கின்றன. வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் என்னது! குரேஷிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என ஆச்சரியத்து  கேட்கின்றனர். நீங்கள் எப்படி?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி