Home /News /entertainment /

Cooku With Comali : ஏன் இந்த திடீர் மாற்றம்? குழப்பத்தில் குக் வித் கோமாளி 3 ரசிகர்கள்!

Cooku With Comali : ஏன் இந்த திடீர் மாற்றம்? குழப்பத்தில் குக் வித் கோமாளி 3 ரசிகர்கள்!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

Cooku With Comali cwc : குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கியது முதலே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மதுரை முத்து இந்த வார எபிசோடுக்கு வருகிறார்.

    குக் வித் கோமாளியில் இந்த வாரம் ரசிகர்களுக்கு வழக்கம் போல் இல்லாமல் ஒரு திடீர் மாற்றம் காத்துக் கொண்டிருக்கிறது. என்னது அது? வாங்க பார்க்கலாம்.

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1, 2-யைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், போட்டியாளர்களாக அம்மு அமிராமி, அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், தர்ஷன், மனோபாலா, பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ராகுல் தாத்தா ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், ஷீத்தல் கிளாரின், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    சம்பள பாக்கி வழக்கு விவகாரத்தில், சிவகார்த்திகேயனிடம் நீதிமன்றம் கேள்வி!

    குக்குகள் சமைக்க, கோமாளிகள் அதை கெடுக்க என மிகப் பெரிய ரீச்சை அடைந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். போன வாரம் நடக்க வேண்டிய எலிமினேஷன் மிஸ் ஆனது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் செய்து பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’யாக தான் இருக்கும். சமையல் நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவை சேர்த்து வெளியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதுவரை வயிறு வலிக்க சிரிக்க மட்டுமே வைத்த இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் அனைவரையும் அழ வைத்தது. கடைசி நேர எலிமினேஷனில் ரோஷினிக்காக, சந்தோஷ அழ, அவர்களை பார்த்து மணிமேகலை அழ, அவர்களுடன் சேர்ந்து செஃப் தாமு அழ என அனைவரும் பாசத்தில் இணைந்து அழ, செஃப் வெங்கடேஷ் பட் நோ எலிமினேஷன் என்றார்.




    இந்நிலையில் இந்த வாரத்திற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை, இந்த வாரம் செலபிரேஷன் வாரம், தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக அனைவரும் செலபிரேஷன் மோடில் வந்துள்ளார்கள். அதை தவிர மற்றொரு மாற்றமும் உள்ளது. இந்த சீசனில் முதன்முறையாக இந்த வாரம், கோமாளிகள் தான் தங்களுடைய குக்குகளை செலக்ட் செய்ய போகிறார்கள்.

    சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் பர்த்டே கொண்டாட்டம் – வைரலாகும் போட்டோக்கள்!

    அதுமட்டுமில்லை, இந்த சீசன் தொடங்கியது முதலே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மதுரை முத்து இந்த வார எபிசோடுக்கு வருகிறார். ஆக மொத்தத்தில் இந்த வாரம் குக் வித் கோமாளி எபிசோடு முழுக்க முழக்க ஃபன் மோடில் இருக்க போகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி