ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிங்கராக களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

சிங்கராக களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி 3வது சீசனில் புதிய கோமாளிகள் அறிமுகம் ஆகினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குக் வித் கோமாளி பிரபலம் பரத் வெள்ளித்திரையில் பாடகராக அறிமுகம் ஆகிறார். இந்த தகவலை அவரே இன்ஸ்டாவில் உறுதி செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் இதுவரை ஒளிப்பரப்பாகி இருக்கின்றன. அதில் சில நிகழ்ச்சிகள் மட்டுமே சீசன்களை கடந்து தொடர்ந்து வெற்றி நிகழ்ச்சியாக மக்களை மகிழ்விக்கும். அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் , கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளுக்கு பிறகு மக்கள் மனதை கொள்ளையடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. குக் வித் கோமாளி ,ஒரு கட்டத்தில் பிக் பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கை தூக்கி சாப்பிட்டது. இந்த நிகழ்ச்சியை ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் விரும்பி பார்க்க தொடங்கினர்.

வெளியே போ.. தாலி கட்டிய பார்த்திபனை அடித்து துரத்திய ரஜினி!

தற்போது 3 வது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதுவும் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. தற்போது ஸ்ருதிக்கா, தர்ஷன், அம்மு அபிராமி, வித்யுலேகா ஆகியோர் ஃபைனல்ஸூக்கு சென்றுள்ளனர். இந்த சீசனில் புதிய கோமாளிகள் அறிமுகம் ஆகினர். அதில் அதிர்ச்சி அருண், பரத், குரேஷி மூவரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். சில இடத்தில் டைமிங் காமெடியில் பழைய கோமாளிகளை இவர்கள் ஓவர்டேக் செய்தனர் என்பதே உண்மை.

இதில் சூப்பர் சிங்கர் பரத் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் பரத்தின் பாடிலேங்வேஜ் நெகடிவ் கமெண்டுகளை சந்தித்தது. ஆனால் அதன் பின்பு கதையே மாறி பரத்தின் ஒரிஜினாலிட்டி இதுதான் என்பது ரசிகர்களுக்கு புரிந்து விட்டது. குறிப்பாக செஃப் வெங்கடேஷ் பட் - பரத் காம்போ பயங்கர ஹிட்.


இந்நிலையில் பரத்தை தேடி மற்றொரு வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. முதன் முறையாக வெள்ளித்திரையில் பாடகராக பரத் அறிமுகம் ஆகியுள்ளார். சூப்பர் சிங்கரில் தனது பாடல் திறமையை வெளிப்படுத்திய பரத் இப்போது மிர்ச்சி சிவா நடித்து இருக்கும் படத்தில் ஜோடி சேரலாம் என்ற பாடலை பாடியுள்ளார். ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cook With Comali Season 2, Television, Vijay tv