Home /News /entertainment /

குக் வித் கோமாளிகளுடன் போட்டி போட ரக்‌ஷன் செய்த காரியம்.. செம்ம வைரல் போங்க!

குக் வித் கோமாளிகளுடன் போட்டி போட ரக்‌ஷன் செய்த காரியம்.. செம்ம வைரல் போங்க!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சியை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சியை ரக்ஷன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

    குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்‌ஷன், நிகழ்ச்சி அரங்கிற்குள் பைக்கை வைத்து செய்துள்ள சாகசம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    பாட்டு, டான்ஸ், கேம் ஷோ என நிகழ்ச்சிகளை மட்டுமல்ல தொகுப்பாளர்களை தனியாக மிளிரவைக்கும் திறமை விஜய் டி.வி.க்கு உண்டு. விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தொகுப்பாளர்கள் எப்போதுமே ரசிகர்களின் தனி கவனத்தை ஈர்ப்பவர்களாக இருந்து வருகின்றனர். வந்தோமா கேமரா முன் நின்று நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தோமா என்று வழக்கமான தொகுப்பாளர்களாக இல்லாமல், எந்த நிகழ்ச்சி ஆனாலும் அதில் தொகுப்பாளர்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பும், தங்களது திறமையை வெளிக்கோணர சந்தர்ப்பமும் கொடுக்கப்படுகிறது.

    சரஸ்வதிக்கு குடும்பத்தால் வரும் புது பிரச்சனை.. செம்ம கோபத்தில் தமிழின் அம்மா கோதை!

    அதனால் தான் விஜய் டி.வி.யில் ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். ரியோ, மா.க.பா. ஆனந்த் ஆகியோரும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களிலும் டிடி, ஜாக்குலின், அர்ச்சனா, பிரியங்கா என பட்டியலில் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த மற்றொரு ஆங்கராக வலம் வருபவர் ரக்‌ஷன், இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமானார்.

    இதனைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு சீசன் 6 மற்றும் 7-யையும் ரக்‌ஷன் தான் தொகுத்து வழங்கினார். KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun ஆல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பங்கேற்றார். 2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மானுக்கு நண்பனாக படம் முழுவதும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

    BIGG BOSS : ஜாக்பாட் அடித்தது.. ரு. 15 லட்சத்துடன் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது இவரா?

    வெள்ளித்திரையில் செகண்ட் ஹீரோவாக அறிமுகமானாலும் தனது தாய் வீடான சின்னத்திரையை மறந்துவிடாமல் நிகழ்ச்சிகளை தொடந்து தொகுத்து வழங்கி வருகிறார். ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சியை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சியை ரக்ஷன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டாவது சீசனைப் போலவே இந்த சீசனிலும் குக் மற்றும் கோமாளிகளுடன் சேர்ந்து ரக்‌ஷன் அடிக்கும் லூட்டி, பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்து வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Rakshan Vj (@rakshan_vj)






    இந்நிலையில் வரும் வாரம் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ரக்‌ஷன் பைக்கில் ஸ்டேண்ட் செய்து அசத்தியுள்ளார். வார, வாரம் குக்குகளும், கோமாளிகளும் தான் வித்தியாசமான கெட்டப்பில் வரணுமா? நம்பளும் ஒருமுறை மாஸா என்ட்ரி கொடுப்போமே? என நினைத்த ரக்‌ஷன், குக் வித் கோமாளி செட்டுக்குள் பைக்கில் வந்திருக்கிறார். அத்துடன் பைக்கில் அமர்ந்த படியே ஸ்டேண்ட் செய்து காண்பித்து, செட்டில் இருந்தவர்களை அசரவைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரக்‌ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி