குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் கடந்த வாரம் ஒளிப்பரப்பானது. இதில் முதல் இடத்தை பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை அடித்து சென்றார் ஸ்ருத்திகா. இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்ருதிக்கா தனது யூடியூப் சேனலில் முக்கியமான விஷயத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதாவது ஸ்ருதிக்காவுக்கு கடுமையாக பயிற்சி கொடுத்து அவரை மெருக்கேற்றி வெற்றியடைய செய்த பயிற்சியாளரை ஸ்ருதிக்கா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரசிகர்களை பொறுத்தவரையில் ஸ்ருதிக்கா தான் டைட்டில் வின்னர், ஆனால் அவர் தனது ட்ரெயினர் சிரூபிகா தான் நிஜமான வெற்றியாளர் என்று கூறியுள்ளார்.
பாலாவின் அந்த மனசுக்கு கிடைத்த 3 லட்சம்.. குக் வித் கோமாளி கடைசி நேர திருப்பம்!
சின்னத்திரையில் அனைத்து வயதினரும் விரும்பி பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி ஷோ. முதல் 2 சீசன்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பின்பு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி 3 சீசனும் மிகப் பெரிய வரவேற்புடன் முடிவடைந்துள்ளது. முதலிடத்தை பிடித்தார் ஸ்ருதிகா, இரண்டாவது இடம் தர்ஷன் மற்றும் மூன்றாவது இடம் அம்மு அபிராமிக்கு வழங்கப்படது. இந்த ஷோவில் ஆரம்பம் முதலே சூப்பராக சமைத்து நடுவர்களை பெரிதும் கவர்ந்தார் தர்ஷன். பெண் போட்டியாளர்களே தர்ஷனின் சமையலை பார்த்து மிரட்டு போய்விட்டார்கள். அந்த அளவுக்கு டஃப் கொடுத்தார் தர்ஷன்.
ஆனால் கடைசி வாரங்களில் ஸ்ருதிக்காவின் சமையல் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது. முதல் ஃபைனலிஸ்ட்டாகவும் தேர்வானார். பலரும் இந்த ரகசியத்தை ஸ்ருதிக்காவிடம் கேட்டு வந்தனர். அந்த ரகசியத்தை இப்போது ஸ்ருதிக்கா தனது சேனலில் லீக் செய்து இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் உறவினர்கள், ஃப்ரண்ட்ஸ், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ரெசிப்பிக்களை கேட்டு அதை வைத்து தான் போட்டியில் சமைத்து வந்தாராம்.
அமீர் - பாவ்னிக்கு தகுதியில்லை. எல்லோர் முன்பும் போட்டுடைத்த தாமரை செல்வி!
ஆனால் போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் மெனுக்களை போல் வித விதமான ரெசிப்பிகளை செய்ய தொடங்கியதும் ஸ்ருதிக்கா செஃப் சிரூபிகா என்பவரிடம் பயற்சிக்கு சென்று இருக்கிறார். அவர் தான் ஸ்ருதிக்காவை மெருகேற்றி அவரின் சமையல் திறமைகளை வெளியே கொண்டு வந்து இருக்கிறார். இவரிடம் பயிற்சிக்கு சென்ற போது ஸ்ருதிக்கா செய்த அலப்பறைகளையும் அவர் வீடியோவில் காட்டியுள்ளார். குக் வித் கோமாளியில் நான் டைட்டில் அடிக்க உண்மையான காரணம் சிரூபிகா தான் என்று ஸ்ருதிக்கா பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.