குக் வித் கிறுக்கு... இது புதுசு...

குக் வித் கிறுக்கு... இது புதுசு...

குக் வித் கிறுக்கு

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.

 • Share this:
  குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தமிழில் கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து கன்னட மொழிக்கு செல்கிறது.

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகிய 8 பேர் குக்காகவும், புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளும் பங்கேற்றனர். இவர்களில் ஒரு சிலர் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

  பிக்பாஸைப் போல் இந்நிகழ்ச்சியும் ஹிட் அடித்திருக்கும் நிலையில் இதில் பங்குபெறுவோருக்கும் வெள்ளித்திரை வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்திலும், தர்ஷா குப்தா ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். அதேபோல் புகழும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் இந்நிகழ்ச்சி கன்னடத்தில் ‘குக் வித் கிறுக்கு’என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. விரைவில் ‘ஸ்டார் சுவர்ணா’ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  முதலில் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற இந்நிகழ்ச்சி தற்போது கன்னட மொழிக்கு சென்றிருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது.
  Published by:Sheik Hanifah
  First published: