குக் வித் கோமாளி சீசன் 3ன் இறுதி போட்டி பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
சமையல் சார்ந்த நிகழ்ச்சி வெறும் இல்லத்தரசிகளுக்கு மட்டுமே என்பதை மாற்றி அமைத்த ஷோ குக் வித் கோமாளி. பெண்கள் மட்டுமே சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளை எப்போதும் பார்த்து கொண்டிருந்த போது, குடும்பமாக எல்லோரையும் ஒன்று சேர்த்து மக்களை கலகலப்பாக சமையல் நிகழ்ச்சியை பார்க்க வைத்தது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் பல தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மூன்றாம் சீசன் ஒளிப்பரப்பாகி வந்தது. தற்போது இந்த சீசனும் முடிவுக்கு வந்துள்ளது. குக் வித் கோமாளி ஃபைனல்ஸ் பிரம்மாணடமாக நடந்து முடிந்துள்ளது.
அந்த விஷயத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டியிருக்கும் சின்னத்திரை ஜோடி!
கடந்த இரண்டு சீசன்களை போல இந்த சீசனிலும் சிறப்பான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதே போன்று கலாட்டா நிறைந்த கோமாளிகளும் இதில் கலந்து கொண்டனர். மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக ரோஷினி, ஸ்ருதிகா, மனோ பாலா, வித்யூ லேகா, சந்தோஷ் பிரதாப், தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, அந்தோணி தாஸ், அம்மு அபிராமி போன்றவர்கள் கலந்து கொண்டனர். அதே போன்று கோமாளிகளாக முன்னர் இருந்த ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி போன்றவர்களுடன் இதில் புதிதாக சூப்பர் சிங்கர் பரத், குரேஷி ஆகியோர் கோமாளிகளாக என்ட்ரி கொடுத்தனர்.
பாக்கியாவுக்கு இப்படியொரு நிலையா! கதறி துடிக்கும் செல்வி அக்கா
இந்நிலையில் பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பின்பு ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிரமி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்கள். அவர்களை தொடர்ந்து வைல்டு கார்டு மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஃபைனல்ஸூக்கு தேர்வாகியுள்ளனர்.
மொத்தம் 6 போட்டியாளர்களுடன் குக் வித் கோமாளி சீசன் 3 இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வெற்றியாளர் யார்? என்ற தகவல் வெளியில் கசியாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ரசிகர்கள் பலரும் தர்ஷன் அல்லது ஸ்ருதிகா தான் வின்னராக தேர்வாகி இருப்பார்கள் என உறுதியாக கூறி வருகின்றனர். ஆனால் டைட்டில் வின்னர்? யார் என்ற தகவல் ஷோ டெலிகாஸ்ட் ஆன பின்பே உறுதியாக தெரிய வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.