’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு ரவுண்டை வென்று இறுதிப் போட்டிக்கு 4-வது போட்டியாளராக நடிகை ஷகீலா தகுதி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நகைச்சுவை சமையல் என இரண்டையும் மையப்படுத்திய இந்நிகழ்ச்சி, விஜய் டிவி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.
Varalaxmi Sarathkumar: திருமண விழாவில் கவனம் ஈர்த்த வரலட்சுமி சரத்குமாரின் க்யூட் டான்ஸ்!
’குக் வித் கோமாளி’ முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். மற்றவர்கள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர்.
AR Rahman: தொகுப்பாளினியின் இந்தி பேச்சால் மேடையை விட்டு இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
இந்நிலையில் அவர்கள் அனைவரும் வைல்ட் கார்டு எண்ட்ரியில் மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்துள்ளனர். இதில் இந்த ரவுண்டை வென்று இறுதி போட்டிக்கு நடிகை ஷகீலா தகுதி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் இறுதிப் போட்டிக்குள் நுழையும் 4-வது போட்டியாளராக அவர் இருப்பார். இருப்பினும் இன்று மாலை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் உறுதிப்படுத்திக் கொள்வோம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்